ஜடேஜா முதல் பும்ரா வரை… காயத்தில் தவிக்கும் இந்திய அணிக்கு மாற்று வீரர்கள் யார்?

ஹனுமா விஹாரி மற்றும் வேகப் பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு 4வது டெஸ்ட்ல் ஓய்வளிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

from Ravindra Jadeja to Jasprit the list of replacing players - ஜடேஜா முதல் பும்ரா வரை... காயத்தில் தவிக்கும் இந்திய அணிக்கு மாற்று வீரர்கள் யார்?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றது. இதில் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் மோசமாக விளையாடிய இந்திய அணி தோல்வியைத் தழுவியது. மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் எழுச்சி கண்டு பழி தீர்த்துக் கொண்டது. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியை சமன் செய்து இருக்கிறது.

இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டியானது வரும் ஜனவரி 15-ம் தேதி பிரிஸ்பேன் நகரில் தொடங்க உள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஒய்வு வழங்கப்பட்டுளது. அதோடு பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி மற்றும் வேகப் பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு 4வது டெஸ்ட்ல் ஓய்வளிக்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹனுமா விஹாரி:

ஹனுமா விஹாரி நேற்றைய போட்டியில் நிதானமாக விளையாடி, இந்திய அணி போட்டியை சமன் செய்ய உதவினார். அஸ்வினுடன் ஜோடி சேர்ந்த விஹாரி போட்டியின் இறுதி வரை அவுட் ஆகாமல் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை நோகடித்தார். போட்டியின் போது அவருக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரிஸ்பேனில் நடக்கும் 4வது போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜஸ்பிரிட் பும்ரா

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இதுவரை சிறப்பாக பந்து வீசி வந்த வேகப் பந்து வீச்சாளர் பும்ரா காயம் அடைந்துள்ளார். சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது பும்ராவுக்கு அடிவயிற்றில் பிடிப்பு ஏற்பட்டது. பின்னர் ஸ்கேன் பரிசோதனையில் காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பும்ரா இறுதி போட்டியில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ரிஷப் பந்த்தின் நிலை :

பிரிஸ்பேனில் நடக்கும் போட்டியில் விஹாரி விளையாடத சூழலில் விக்கெட் கீப்பிங் செய்ய சாஹாவை பயன்படுத்த வாய்ப்புள்ளது. 3 -வது போட்டியில் ரிஷப் பந்த் விளையாடும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். அதோடு நல்ல ஃபார்மில் இருப்பதால், அவருக்கே அதிகமான வாய்ப்பு கிடைக்கும். மற்றும் கூடுதல் பேட்ஸ்மேன்களாக பிரித்வி ஷா, அகர்வால் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

ஷர்துல் தாக்கூர் அல்லது நட்ராஜ்

மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்சில் ஆடியபோது ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்தார். 4வது போட்டியில் அவருக்கு பதில் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இடம்பெற வாய்ப்பு உள்ளது.மற்றும் பும்ரா 4வது போட்டியில் ஒய்வு அளிக்கப்பட்டு உள்ளதால் தமிழக வீரர் டி.நடராஜன் அணிக்குள் வருவதற்கான வாய்ப்பு கிடைத்து உள்ளது .

4 – வது டெஸ்ட்ல் இந்தியாவுக்கான வேகப் பந்து வீச்சாளர்களின் பட்டியல்:

ஜனவரி 15 ஆம் தேதி முதல் பிரிஸ்பேனில் நடக்கும் 4 – வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் வைத்து தான் இந்திய அணி தாக்குதலை ஆரம்பிக்கும். பின்னர் நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர் மற்றும் டி நடராஜன் ஆகியோர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: From ravindra jadeja to jasprit the list of replacing players

Next Story
ஊக்க மருந்து தடை முடிவு… 15 மாதத்திற்கு பின்னர் டென்னிஸில் ஷரபோவா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com