Rameshbabu Praggnanandha Tamil News: அமெரிக்காவின் மயாமியில் நகரில் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 1.6 மில்லியன் டாலர்களை பரிசாக வழங்கும் மெல்ட்வாட்டர்ஸ் சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பெரிய நிகழ்வு இதுவாகும். எட்டு வீரர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் (ஆல்-பிளே-ஆல்) ஒவ்வொரு வீரரும் மற்ற 7 வீரர்களுடன் ஒரு முறை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் வீரர்களுக்கு 7,500 டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், போட்டியின் முடிவில் 100,000 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின் போனஸாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் போட்டி தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனான கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி அசத்தினார் பிரக்ஞானந்தா. இருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் தொடரின் வெற்றியாளராக மேக்னஸ் கார்ல்சன் அறிவிக்கப்பட்டார். பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இந்த எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர்.6 வீரரான லெவோன் அரோனியனை 3-1 என்ற கணக்கில் வீழ்த்திய அபார வெற்றி உட்பட நான்கு தொடர்ச்சியான வெற்றிகளுடன் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றார். அதன்பிறகு, அலிரேசா ஃபிரோஸ்ஜாவுக்கு எதிரான வெற்றியுடன் அவர் தனது அதிரடி ஆட்டத்தையும் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அனிஷ் கிரி மற்றும் ஹான்ஸ் நீமன் ஆகியோரையும் தோற்கடித்தார் பிரக்ஞானந்தா.
Not the ending Magnus Carlsen would have wanted, as he blunders against Praggnanandhaa just when he was on the verge of forcing Armageddon! https://t.co/IbzJPYmpjn #ChessChamps #FTXCryptoCup pic.twitter.com/RYjbaO4WMZ
— chess24.com (@chess24com) August 21, 2022
எனினும், ஐந்தாவது சுற்றில் சீனாவின் குவாங் லீம் லீயின் கைகளில் பிரக்ஞானந்தாவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது. ஆறாவது சுற்றில் டை-பிரேக் மூலம் போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடாவிடம் தோல்வியடைந்த பிறகு அவர் தொடரில் தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தார்.
உலகச் சாம்பியனை 3-வது முறையாக வீழ்த்தி சாதனை
இந்த ஆண்டு பிப்ரவரியில், ஆன்லைன் சாம்பியன்ஷிப்பில் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 கார்ல்சனை வீழ்த்தி பாராட்டுகளைப் பெற்றார். 2016 ஆம் ஆண்டில் 10 வயதில் வரலாற்றில் இளைய சர்வதேச மாஸ்டர் ஆன 16 வயதான பிரக்னாநந்தா, ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் கார்ல்சனை வீழ்த்தினார்.
It's a done deal- Praggnanandhaa wins 3 games in a row and defeats Magnus Carlsen in the blitz playoffs! The boy has created history, and he finishes second in the @ChampChessTour FTX Crypto Cup. pic.twitter.com/KsWzw1TqGo
— ChessBase India (@ChessbaseIndia) August 21, 2022
இதன்பிறகு, இந்த ஆண்டு மே மாதம், செசபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்தார். தற்போது அவர் மேக்னஸ் கார்ல்சனை கிரிப்டோ செஸ் தொடரிலும் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், 17 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்னாநந்தா வெறும் ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.