இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த 27 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்த டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) இரவு நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து அதே 137 ரன்களை எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது. இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார். இந்த சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஏற்கனவே 3 ஓவர்களை வீசியிருந்த கலீல் அகமது மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓவர் வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, அதுவரை ஒரு ஓவர் கூடாத ரிங்கு சிங் 19-வது ஓவரையும், கேப்டன் சூரியகுமார் யாதவ் 20-வது வீசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
19-வது ஓவரை வீசிய ரிங்கு சிங் 3 ரன்னை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினார். இதேபோல், கடைசி ஓவரை வீசிய கேப்டன் சூரியகுமார் 5 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார். இலங்கை அணி எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை, இருவரும் சாதுரியமாக பந்துகளை வீசிய ஆட்டத்தில் இந்தியாவை உயிர்ப்புடன் இருக்க வைத்தனர். கடைசியில் இந்திய அணி தொடரை முழுவதுமாக வசப்படுத்த உதவினர்.
இந்த நிலையில், ரிங்கு சிங் மற்றும் கேப்டன் சூரியகுமாரை பந்துவீச அனுமதித்து, அவர்களை ஊக்குவித்த புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள். இக்கட்டான தருணத்தில் இதுபோன்ற முடிவுகளை அவரால் தான் எடுக்க முடியும் என்றும், ரிங்கு சிங், சூரியகுமார் மற்றும் 4 ஓவர் வீசி 27 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்த ரியான் பராக் ஆகியோரை அடுத்த முத்தையா முரளிதரன், அனில் கும்ளே மற்றும் ஷேன் வார்ன் போன்ற ஜாம்பவான் வீரர்கள் போல் வலம் வருவார்கள் என்றும் குறிப்பிட்டு மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளார் நெட்டிசன்கள்.
Surya kumar yadav, Rinku Singh and riyan parag under Gautam Gambhir pic.twitter.com/wOG7PuB9Mb
— Registanroyals (@registanroyals) July 30, 2024
In the era of Gambhir, every batsman is a bowler, and every bowler is a batsman, yet they all deliver performances that dazzle and amaze.#SLvIND #suryakunaryadav #Washington #rinku pic.twitter.com/n7boeMfWKU
— devotee_rahul_soni (@Rahul_shraff_1) July 30, 2024
Who will defend 9 runs from last 2 overs? Siraj or Khaleel?
— AKSHAY ♠️ (@mr_Akshay_4747) July 30, 2024
Gambhir - Rinku and Sky #SLvIND pic.twitter.com/u8On5X1Xwg
Riyan Parag, Rinku Singh and Surya Kumar Yadav under Gautam Gambhir's coaching.#INDvsSL pic.twitter.com/A12zpcB40W
— Sunil the Cricketer (@1sInto2s) July 30, 2024
we got rinku singh and sky taking wickets under gambhir ball pic.twitter.com/5H5nNvF1iw
— meghna (@freefcbintern) July 30, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.