Advertisment

'டெல்லி கிரிக்கெட்டில் இருந்து ஓடியவர்': சர்ச்சை டுவிட்டில் கம்பீர் குறிப்பிடும் நபர் யார்?

கோலியுடன் மோதல் போக்கை கடைபிடித்த கம்பீர் தனது ட்வீட் மூலம் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Gambhir's vicious attack on Rajat Sharma for ‘paid PR’ on reporting Kohli episode Tamil News

Gautam Gambhir ( Lucknow Super Giants mentor)

Gautam Gambhir's  controversial cryptic tweet Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் குறைவில்லாமல் நடந்து வரும் இந்த தொடரில் சர்ச்சைகளும், பிரச்சனைகளும் பஞ்சமில்லாமல் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதில், கடந்த திங்கள்கிழமை லக்னோ மண்ணில் நடந்த லீக் ஆட்டத்தில் இரு முன்னணி இந்திய வீரர்களுக்கு இடையே முண்ட வார்த்தைப் போர் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறது.

Advertisment

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய அந்த ஆட்டத்தில் பெங்களுருவின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே நடந்த மோதல் போக்கு கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி போட்டி அமைப்பாளர்களையும் அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி இருக்கிறது.

publive-image

மைதானத்தில் நடந்த சம்பவத்தை அங்கேயே மறந்து விட்டு நாகரீகமாக கைகுலுக்குவதை விடுத்து, வீரர்கள் ஆட்டம் முடிந்த பிறகு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது. கோலி - கம்பீர் மோதலுக்கு பல முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் தெரித்துள்ள நிலையில், சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் போன்ற ஜாம்பவான்கள் வீரர்கள் பி.சி.சி.ஐ விதித்த ‘100% அபராதம்’ போதாது என்றும், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

கம்பீர் சர்ச்சை ட்வீட்

இதுஒருபுறமிருக்க, கோலியுடன் மோதல் போக்கை கடைபிடித்த கம்பீர் தனது ட்வீட் மூலம் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அழுத்தத்தை" காரணம் காட்டி டெல்லி கிரிக்கெட்டில் இருந்து ஓடியவர், கிரிக்கெட் மீதான அக்கறையாக பணம் செலுத்திய PR-ஐ விற்க அதிக ஆர்வம் காட்டுகிறார்! என்றும் தப்பியோடியவர்கள் 'நீதிமன்றத்தை' நடத்தும் கலியுகம் இது என்றும் பதிவிட்டுள்ளார்.

கம்பீர் குறிப்பிடும் நபர் யார்?

கம்பீர் மறைமுகமாக குறிப்பிடும் அந்த நபர், தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் முன்னாள் டெல்லி மற்றும் மாவட்ட சங்கத்தின் (DDCA) தலைவர் ரஜத் சர்மாவைத் தான். ரஜத், இந்தியா டிவியில் தனது செய்தி நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கம்பீருக்கு பெருத்த ஈகோ இருப்பதாகக் கூறினார். "ஆக்ரோஷமான, முட்டாள்தனமான வீரர்" என்று அவர் அழைத்த விராட், கம்பீருக்கு "மீண்டும்" திருப்பி கொடுக்கக்கூடியவர் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

கம்பீரின் செயல்கள் விளையாட்டுத் திறமைக்கு எதிரானது என்றும், எம்.பி. என்ற அந்தஸ்தை அவர் மதிக்கவில்லை என்றும், அந்த ஜென்டில்மேனின் ஆட்டத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் அவர் கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் கம்பீர், ரஜத் ஷர்மாவின் பிரபலமான நிகழ்ச்சியான ‘ஆப் கி அதாலத்’ குறித்து ட்வீட் பதிவிட்டார்.

ரஜத் நவம்பர் 2019ல் டெல்லி மற்றும் மாவட்ட சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஜூலை 2018ல் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gautam Gambhir Cricket Sports Virat Kohli Ipl News Ipl Cricket Lucknow Super Giants Lucknow Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment