Advertisment

கங்குலி – கோலி கருத்து வேறுபாடு… உளவு கேமராவில் உண்மையை உடைத்த பி.சி.சி.ஐ தலைவர்!

சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையேயான கருத்து வேறுபாட்டிற்கான உண்மையான காரணம் குறித்து பிசிசிஐ தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ganguly - Kohli rift; Chief selector Chetan Sharma in sting video Tamil News

In September 2021, Virat Kohli announced his decision to step down as T20 captain after the T20 World Cup in Dubai following which the BCCI stripped him of ODI captaincy in December. The BCCI named Rohit Sharma as the white-ball captain.

Sourav Ganguly - Virat Kohli - Chetan Sharma sting Tamil News: கடந்தாண்டு இறுதியில், ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு, சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு கலைக்கபட்டது. இதன்பிறகு, மீண்டும் அவர் தலைமியிலேயே புதிய குழு ஒன்றை பிசிசிஐ கடந்த ஜனவரியில் அமைத்தது. அந்தக் குழுவில் ஷிவ் சுந்தர் தாஸ், சுரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா ஸ்டிங் ஆபரேஷனுக்கு ஆளானார். ஜீ நியூஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட அந்த ஸ்டிங் ஆபரேஷனின் உளவு கேமராவில், இந்திய அணியில் போலி பிட்னஸ் ஊசி பயன்படுத்தப்பட்டது, சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையேயான கருத்து வேறுபாட்டிற்கான உண்மையான காரணம் மற்றும் அணியில் இருந்து வீரர்களை நீக்கியதற்கு யார் காரணம் என்பது உள்ளிட்ட முன்னர் மறைக்கப்பட்ட உண்மைகளை சேத்தன் சர்மா வெளிப்படுத்தியுள்ளார்.

கங்குலி - கோலி கருத்து வேறுபாடு

பிசிசிஐ தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மா கூறியவைகளில், சவுரவ் கங்குலி - விராட் கோலி இடையேயான கருத்து வேறுபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கங்குலி – கோலி மாறுபட்ட கருத்து… யார் சொல்வது உண்மை…?

கடந்த செப்டம்பர் 2021ல், துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை விராட் கோலி அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து டிசம்பரில் பிசிசிஐ அவரை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கியது. பின்னர், பிசிசிஐ ரோகித் சர்மாவை ஒயிட்-பால் கிரிக்கெட் அணி கேப்டனாக நியமித்தது.

விராட் கோலியின் பதவி விலகல் முடிவு குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு முன்னாள் பிசிசிஐ தலைவைரான சவுரவ் கங்குலி பேட்டியளித்து இருந்தார். அதில் அவர், "டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறனைப் பொருட்படுத்தாமல், விராட் கோலி டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்காவிட்டால், ஒயிட்-பால் கேப்டனாகத் தொடர்ந்திருப்பார். அப்போது கேப்டன் பதவியை மாற்றும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், குழப்பத்தைத் தவிர்க்கவே சிவப்பு மற்றும் வெள்ளை பந்து கேப்டன்களை முற்றிலும் பிரிக்க தேர்வாளர்கள் இப்படி முடிவு செய்தனர்.

publive-image

விராட் கோலியை டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று நாங்கள் (பிசிசிஐ) அவரிடம் கேட்டுக்கொண்டோம். தவிர, ஒருநாள் கேப்டன்சி மாற்றம் குறித்து கோலியுடம் தனிப்பட்ட முறையில் நான் பேசினேன். தேர்வாளர்களும் கோலியிடம் பேசினார்கள். ஆனால், கோலி அவர்களின் எவ்வித கருத்துக்களும் செவி சாய்க்கவில்லை” என்று கூறியிருந்தார்.

ஆனால், கங்குலியின் கருத்துக்கு கோலி முரண்பட்டு இருந்தார். தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு (டிசம்பர் 15 ஆம் தேதி) முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோலி, “டி20 கேப்டன் பதவியில் இருந்து நான் விலகுவதாக அறிவித்ததிலிருந்து (டிசம்பர் 8 ஆம் தேதி வரை), பிசிசிஐ உடன் எனக்கு எந்த தொடர்பு சரியாக நடக்கவில்லை. அவர்களிடம் இருந்து முறையான எந்த பதிலும் கிடைக்கவில்லை.

publive-image

தென் ஆப்பிரிக்காவுக்கான டெஸ்ட் அணியை தேர்வு செய்வதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தான் என்னை தொடர்பு கொண்டார்கள். அப்போது 5 தேர்வாளர்கள் நான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க மாட்டேன் என்று என்னிடம் சொன்னார்கள். ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்குவது குறித்து என்னக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. நானும் அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால், டி20 கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்று என்னிடம் யாரும் ஒருபோதும் கூறவில்லை.” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜீ நியூஸின் ஸ்டிங் ஆபரேஷனில், டி20 கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்கும் முன் ‘ஒருமுறை யோசியுங்கள்’ என்று கோலியிடம் கங்குலி கூறியதாகவும், ஆனால் வீடியோ கான்ஃபரன்ஸின் போது அவர் அதைக் கேட்காமல் இருந்திருக்கலாம் என்றும் சேத்தன் ஷர்மா கூறியுள்ளார்.

"பிசிசிஐ தலைவரால் கேப்டன் பதவியை இழந்ததாக விராட் கோலி உணர்ந்தார். தேர்வுக் குழுவின் வீடியோ கான்பரன்ஸில் ஒன்பது பேர் இருந்தனர். கங்குலி அவரிடம் ‘ஒரு முறை யோசித்துப் பாருங்கள்’ என்றார். கோலி அதைக் கேட்கவில்லை என்று நினைக்கிறேன். நான் மற்றும் மற்ற அனைத்து தேர்வாளர்கள், பிசிசிஐ அதிகாரிகள் உட்பட மேலும் ஒன்பது பேர் அங்கு இருந்தோம்,

இரண்டு ஈகோக்கள் மோதுகின்றன. கங்குலி என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டார் என்று கோலி நினைக்கிறார். எனவே அவருக்கு நான் பாடம் கற்பிப்பேன். அவர் (விராட் கோலி) கங்குலி தன்னைக் களங்கப்படுத்துவதற்காக இதைச் செய்கிறார் என்று அறிக்கை அளித்தார். இதை அவர் (விராட் கோலி) ஊடகங்களில் சொல்ல முயன்றார்… அது அவருக்கு (விராட் கோலி) பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

publive-image

இது ஈகோவின் சர்ச்சை. அவர் (விராட் கோலி) நான் பெரியவன் என்கிறார். அவர் (கங்குலி) நான் பெரியவன் என்கிறார். சவுரவ் கங்குலி நாட்டின் கேப்டனாகவும் இருந்துள்ளார். மிகப் பெரிய கேப்டன், மிகவும் நம்பகமானவர் மற்றும் அவர் இன்றும் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். விராட்கோலி தான் மிகவும் வெற்றிகரமானவர் என்று உணர்கிறார். கோலி தான் கங்குலி பொய் சொல்கிறார் என்று கூறினார், அப்போது தான் மோதல் ஏற்பட்டது." என்று சேத்தன் சர்மா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும், அவரிடம் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா என்றும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே சண்டை இல்லை. ஆனால் ஈகோ இருக்கிறது. இருவரும் பெரிய திரைப்பட நட்சத்திரங்கள், அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா என்று நீங்கள் கூறலாம்”என்று அவர் கூறியுள்ளார்.

தவிர, சேத்தன் சர்மா அந்த வீடியோவில், வீரர்கள் எப்படி போலியான (தெளிவான) உடற்தகுதி சோதனைக்கு ஊசி போடுகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார். மேலும் தற்போதைய டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது எதிர்காலத்தைப் பற்றி அவரிடம் அடிக்கடி பேசுவதற்காக தனது இடத்திற்கு வருவார் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Virat Kohli Sports Rohit Sharma Cricket Indian Cricket Team Hardik Pandya Indian Cricket Sourav Ganguly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment