குகேஷ் ஆடுவது கம்ப்யூட்டருக்கு எதிராக விளையாடுவது போன்றது ஏன்? விளக்கும் முன்னாள் உலக சாம்பியன்

குகேஷ் விளையாடுவது ஏன் 'கணினிக்கு எதிராக விளையாடுவது போன்றது' என்பதை 13 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கேரி காஸ்பரோவ் விளக்கி இருக்கிறார்.

குகேஷ் விளையாடுவது ஏன் 'கணினிக்கு எதிராக விளையாடுவது போன்றது' என்பதை 13 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கேரி காஸ்பரோவ் விளக்கி இருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Garry Kasparov explains why playing Gukesh like playing against computer Tamil News

13 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கேரி காஸ்பரோவ் 1990-களில் ஐ.பி.எம் இன் டீப் ப்ளூ போன்ற இயந்திரங்களுக்கு எதிராக மிகவும் பிரபலமான சில போட்டிகளை விளையாடியவர்.

குரோஷியாவின் ஸாக்ரெப் நகரில் சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், ரேபிட் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில், குகேஷ் விளையாடுவது ஏன் 'கணினிக்கு எதிராக விளையாடுவது போன்றது' என்பதை 13 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கேரி காஸ்பரோவ் விளக்கி இருக்கிறார். 

Advertisment

இந்தப் போட்டிக்கான வர்ணனையில் ஈடுபட்ட கேரி காஸ்பரோவ், 1990-களில் ஐ.பி.எம் இன் டீப் ப்ளூ போன்ற இயந்திரங்களுக்கு எதிராக மிகவும் பிரபலமான சில போட்டிகளை விளையாடியவர். இந்த சூழலில், அவர் குகேஷை ஒரு இயந்திரத்துடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார். கடந்த வியாழக்கிழமை குகேஷ் கார்ல்சனை வீழ்த்துவதற்கு முன்பு கேரி காஸ்பரோவ் இதைச் சொல்லி இருந்தார் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்

ஜான்-க்ர்ஸிஸ்டோஃப் டுடாவிடம் தனது முதல் சுற்றில் தோல்வியடைந்த குகேஷ், அடுத்த நடந்த 4 சுற்று போட்டிகளில் அலிரேசா ஃபிரூஸ்ஜா, பிரக்ஞானந்தா, நோடிர்பெக் அப்துசட்டோரோவ் மற்றும் ஃபேபியானோ கருவானா போன்ற சிறந்த வீரர்களை தோற்கடித்து, தொடர் வெற்றிகளை குவித்தார். அதன்பிறகு, 6-வது சுற்றில் குகேஷ் கார்ல்சனுடன் விளையாடினார். கருப்புக் காய்களுடன் குகேஷ் ஆடியது சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனாலும், தனது அசாத்திய திறனால் குகேஷ் மேக்னஸ் கார்ல்சனை சாய்த்தார். தனது 49-வது நகர்வில் குகேஷிடம் சிக்கிக் கொண்ட கார்ல்சன் பெரும் ஏமாற்றத்துடன் போட்டி நடந்த இடத்தை விட்டு வெளியேறினார் கார்ல்சன். 

குகேஷ் பற்றி கேரி காஸ்பரோவ் பேசுகையில், "அவர் தோற்கடிக்க கடினமான வீரர். குகேஷுக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும் பல உயிர்கள் உள்ளன. நீங்கள் அவரை பல முறை வெல்ல வேண்டும். அவருக்கும் கணினிக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அவருக்கு கணினிகளை நினைவூட்டும் ஒரு மீள்தன்மை உள்ளது. அவர் அநேகமாக மிகவும் மீள்தன்மை கொண்ட வீரர். மேக்னஸுக்கு கூட வேறு நன்மைகள் உள்ளன. 

Advertisment
Advertisements

ஆனால் மீள்தன்மையைப் பொறுத்தவரை, அவர் முற்றிலும் அற்புதமானவர். மேக்னஸுக்கு எதிரான பிரபலமற்ற ஆட்டத்தை நீங்கள் (நார்வே செஸ்ஸில்) பார்த்தால், மேக்னஸ் +3 அல்லது +4 என்ற நன்மையைப் பெற்றபோது ஒரு ஆட்டத்தில் தோற்றதாக எனக்கு நினைவில் இல்லை. அவர் எனக்கு கணினிகளை நினைவூட்டுவதற்கான காரணம் என்னவென்றால், இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது, ​​நீங்கள் உங்கள் கவனத்தை இழக்கிறீர்கள், நீங்கள் இறந்துவிட்டீர்கள். குகேஷுக்கு எதிராக ஆடும் போது நீங்கள் அவரை ஐந்து முறை வெல்ல வேண்டும். 

அவருக்கு மோசமான தொடக்கம் இருந்தது. முதல் சுற்றில் அவர் டுடாவிடம் உறுதியாகத் தோற்றார். பின்னர் குகேஷ் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்றார். அதுவும் வேகமாக வென்றார். அவர் வென்ற வீரர்களைப் பாருங்கள், அலிரேசா, ஃபேபி உள்ளிட்ட நான்கு முன்னணி வீரர்களை வீழ்த்தினார். அவர் நன்றாக விளையாடினார். அவரும் தவறுகளைச் செய்துள்ளார்." என்று அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, குகேஷ் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய போது பேசிய கேரி காஸ்பரோவ், "இப்போது நாம் மேக்னஸின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்க முடியும். இது குகேஷிடம் அவர் இழந்த இரண்டாவது தோல்வி மட்டுமல்ல, இது ஒரு உறுதியான தோல்வி. இம்முறை குகேஷ் வென்றது அதிர்ஷ்டம் அல்ல. அல்லது மேக்னஸின் மோசமான தவறுகளிலிருந்து குகேஷ் தொடர்ந்து பயனடைந்து வந்தார் என்றும் சொல்ல முடையது. இது ஒரு பெரிய சண்டையாக இருந்த ஒரு ஆட்டம். அதில் மேக்னஸ் தோற்றுள்ளார்." என்று அவர் கூறியிருந்தார்.

Chess Gukesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: