Advertisment

அதானி - பிரக்ஞானந்தா திடீர் சந்திப்பு: எக்ஸ் பக்கத்தில் புகழாரம்

சீனாவின் ஹாங்ஷுவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் அணி போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

author-image
WebDesk
New Update
Gautam Adani meets chess champion Praggnanandhaa Tamil News

அதானி குழுமத் தலைவரும், தொழிலதிபருமான கவுதம் அதானி இந்தியாவின் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தாவை இன்று சந்தித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gautam-adani | pragnanandha: ‘பிடே’ (FIDE) நடத்திய உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி முதல் நடந்த இப்போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தோற்கடித்து உலகக் கோப்பை பட்டத்தை வென்றார். 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். எனினும், இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்பட்டது. 

Advertisment

இதன்பிறகு, சீனாவின் ஹாங்ஷுவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆண்கள் அணி போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது பிரக்ஞானந்தா  இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஃபிடே கேண்டிடேட் செஸ் தொடரில் பங்கேற்க தீவிரமாக தயாராகி வருகிறார். 

இந்நிலையில், அதானி குழுமத் தலைவரும், தொழிலதிபருமான கவுதம் அதானி இந்தியாவின் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தாவை இன்று சந்தித்துள்ளார். இதுதொடர்பாக கவுதம் அதானி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “பிரக்ஞானந்தா செஸ் உலகில் தொடர்ந்து பதக்கங்களை வென்று இந்தியாவை பெருமைப்படுத்துவதால் அவருக்கு ஆதரவளிப்பது ஒரு பாக்கியம்.

நமது தேசத்தின் மகத்துவத்தைக் கொண்டாட மேடையில் நிற்பதைவிட, திருப்திகரமானது எதுவுமில்லை என்று, எண்ணற்ற இளம் இந்தியர்கள் நம்புவதற்கு பிரக்ஞானந்தாவின் வெற்றி உத்வேகம் அளிக்கிறது. பிரக்ஞானந்தா என்பது இந்தியாவால் என்ன செய்ய முடியும், என்னவாக இருக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pragnanandha Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment