ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Gambhir heaps confidence on KL Rahul to step in as opener; Bumrah will be skipper if Rohit misses
இந்த டெஸ்ட் தொடருக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில், இத்தொடருக்காக ஆஸ்திரேலியா பறக்கும் முன், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், சொந்த காரணங்களுக்காக கேப்டன் ரோகித் சர்மா பெர்த்தில் நடக்கும் தொடக்கப் போட்டியை தவற விட்டால், கே.எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக கம்பீர் பேசுகையில், "முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஒருவேளை ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினால் பும்ரா அணியை வழிநடத்துவார். ரோகித் சர்மாவுக்கு மாற்று தொடக்க ஆட்டக்காரராக அபிமன்யு ஈஸ்வரன் அல்லது கே.எல்.ராகுல் விளையாடுவார்.
ரோகித்துக்கு பதிலாக விருப்பங்கள் இல்லை என்பதல்ல. அணியில் நிறைய விருப்பங்கள் உள்ளன. கே.எல்.ராகுல் பல்துறை வீரராக இருக்கிறார். அவர் உண்மையில் வரிசையில் முதலிடத்தில் பேட் செய்ய முடியும். அவரால் நம்பர் 3 இல் பேட் செய்யலாம். மேலும் அவர் நம்பர் 6 இல் பேட் செய்யலாம். எனவே, இதுபோன்ற வேலைகளைச் செய்ய உங்களுக்கு நிறைய திறமைகள் தேவை.
அவர் ஒரு நாள் போட்டியில் கீப்பராக செயல்பட்டு இருக்கிறார். அதனால், கே.எல்.ராகுல் போன்ற வீரர் எத்தனை நாடுகளில் தொடக்க வீரராக ஆட முடியும் மற்றும் நம்பர் 6 இல் பேட் செய்யக்கூடிய வீரர் என்று கற்பனை செய்து பாருங்கள்? தேவைப்பட்டால், அவர் நமக்கான வேலையைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக ரோகித் முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை என்றால், அவரால் அதனைச் செய்ய முடியும்.
மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக நிறைய சாதித்திருக்கிறார்கள். எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக விளையாடவே முயற்சிக்கிறோம்" என்றும் கம்பீர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“