Advertisment

"எனக்கு இதுவே போதும்" - ட்ரெஸ்ஸிங் ரூமில் இந்திய வீரர்களை விளாசிய காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியில் நிலவி வரும் குழப்பம் தொடர்பாக, அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் வீரர்களிடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian team issue

இந்தியா அணி 20.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தோல்வியை தழுவியது. இதன் தொடர்ச்சியாக இந்திய வீரர்களை, அணியின் பயிற்சியாளர் காம்பீர் கடுமையாக சாடியுள்ளார். குறிப்பாக, "எனக்கு இதுவே போதும்" என காம்பீர் தெரிவித்துள்ளார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: EXPRESS EXCLUSIVE: Gautam Gambhir cracks whip on Team India’s chaotic dressing room: ‘Bahut ho gaya’

 

Advertisment
Advertisement

வீரர்களின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்களின் விளையாட்டு முறை குறித்து காம்பீர் விமர்சித்துள்ளார். ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப விளையாடாமல், தங்கள் இயல்பான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜூலை 9-ஆம் தேதி அணியின் பயிற்சியாளராக காம்பீர் பொறுப்பேற்றார். அதில் இருந்து கடந்த ஆறு மாதங்கள், வீரர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களை விளையாட அனுமதித்ததாகவும், இனி அவர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்று தீர்மானிக்கப்போவதாகவும் காம்பீர் கூறியதாக தெரிகிறது. அதன்படி, காம்பீரின் அறிவுரைப்படி விளையாடாத வீரர்கள், அணியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகும் என அவர் எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 1-2 என பின்தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது கடினமாக இருப்பதால் காம்பீருக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.

உள்நோக்கம் மற்றும் குழு நலன் குறித்து காம்பீர் உரையாற்றியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திட்டமிட்டபடி விளையாடுவதற்கு பதிலாக, வீரர்கள் தனிச்சையாக செயல்படுவதாக காம்பீர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

மெல்போர்ன் டெஸ்டின் கடைசி நாளில் உணவு இடைவேளிக்கு முன்பாக, வைட் பந்தை விராட் கோலி ஆடினார். இதனால் அணிக்கு சிக்கலான சூழல் எழுந்தது. மேலும், முதல் இன்னிங்ஸில் லப் ஷாட் ஆஃப் பேசரிலும், இரண்டாவது நாள் ஷார்ட் பாலிலும் ரிஷப் பன்ட் ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தனது ஃபார்மிற்கு திரும்ப போராடி வருகிறார். இது போல் பல விஷயங்கள் இந்திய அணியை தோல்வி பாதைக்கு அழைத்துச் சென்றன.

இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் சீரான சூழல் நிலவவில்லை என பல நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே பதற்றமான சூழல் நிலவியதாக தெரிகிறது. சுமார் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனுபவம் வாய்ந்த புஜாராவை அணியில் சேர்க்க வேண்டும் என காம்பீர் அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், காம்பீரின் கோரிக்கையை தேர்வுக் குழுவினர் நிராகரித்தனர். பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற பின்பும் கூட புஜாராவை அணியில் சேர்ப்பது குறித்து காம்பீர் பேசியதாக கூறப்படுகிறது.

ஒரு அணி தனது இடைநிலைக் கட்டத்தில் இருக்கும் போது, தனி நபர்களின் விருப்பங்கள் மற்றும் லட்சியங்கள் அணிக்கு பின்னடைவாக அமையும். போட்டியின் தொடக்கத்தில் அணியில் ரோகித் ஷர்மா இல்லாமல் இருந்தார். அந்த சூழலில் இரண்டு வீரர்கள், இந்தியாவை சிறப்பாக செயல்பட வைப்பது தங்கள் கரங்களில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும், தனது எதிர்காலம் குறித்து ரோகித் முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிக்குள் வெளிப்படையான பிளவு இல்லையென்றாலும், குழப்பமான சூழல் நிலவி வருவதை மறுக்க முடியாது. இதேபோல், அணிக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் குறித்து பலருக்கு மாற்று கருத்து இருப்பதாக கூறப்படுகிறது. அபிஷேக் நாயரை அணியுடன் அழைத்துச் சென்றது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனிடையே, சுற்றுப் பயணத்தின் பாதியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்து வெளியேறியதும் பேசுபொருளானது. அவமானத்தின் காரணமாக தனது மகன் வெளியேறியதாக அஸ்வினின் தந்தை கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அஸ்வின் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த தொடரில் சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் 2-2 என்ற கணக்கில் சமநிலை பெறும். அப்படி உருவாகும் சூழலில் கடந்த தொடரில் பெற்ற வெற்றியின் அடிப்படையில் கோப்பையை இந்தியா தக்கவைக்கும்.

Gautam Gambhir Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment