Advertisment

'சொந்த அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய கவுரவம் இல்லை': கம்பீர் பேச்சு

கொல்கத்தாவின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
Gautam Gambhir on coaching India Tamil News

சொந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய கவுரவம் வேறொன்றும் இல்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gautam Gambhir | Indian Cricket Team: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வரும் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் பதவிக்காலம் வருகிற ஜூன் 2 முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியது. 

Advertisment

அண்மையில் நடந்து முடிந்த 17-வது ஐ.பி.எல் தொடரில் கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசராக செயலாற்றிய நிலையில், அவரது ஊக்கத்திலும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலும் சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது முறையாக கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. கொல்கத்தாவின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், சொந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய கவுரவம் வேறொன்றும் இல்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அபுதாபியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய கம்பீர், “நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன். உங்கள் தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை. நீங்கள் 140 கோடி இந்தியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்" என்றுகூறினார்.

'இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்து, உங்கள் அனுபவத்தை கொண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல  உதவுவீர்களா? என மாணவர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, கம்பீர், “இந்த கேள்விக்கு பலர் என்னிடம் கேட்டாலும் நான் பதிலளிக்கவில்லை. ஆனால் நான் இப்போது உங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

உலகக் கோப்பையை இந்தியா வெல்ல 140 கோடி இந்தியர்கள் உதவுவார்கள். எல்லோரும் நமக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால், நாம் விளையாடி அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினால், இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். மிக முக்கியமான விஷயம், அச்சமின்றி இருப்பதுதான்,” என்றார் கம்பீர் பதிலளித்தார். 

இந்த வார தொடக்கத்தில், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, "அவர் ஒரு நல்ல தேர்வு" என்று கூறி, இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கம்பீரை ஆதரித்தார்.

2008 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கம்பீர், 2007 ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னணி வீரராக இருந்தார்.

“பாதுகாப்பான டிரஸ்ஸிங் ரூம் என்பது மகிழ்ச்சியான டிரஸ்ஸிங் ரூம், மேலும் மகிழ்ச்சியான டிரஸ்ஸிங் ரூம் வெற்றிபெறும் டிரஸ்ஸிங் ரூமில் முடிவடைகிறது. கே.கே.ஆரில் நான் செய்த ஒரே விஷயம் இந்த மந்திரத்தைப் பின்பற்றுவதுதான். கடவுளின் அருளால் அது உண்மையில் வேலை செய்தது,” என்று கம்பீர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian Cricket Team Gautam Gambhir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment