Kapil-dev | gautam-gambhir: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற கேப்டன்களில் ஒருவர் கபில் தேவ். இவரது தலைமையிலான இந்திய அணி கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை வென்று சாதனையைப் படைத்தது. இந்திய அணிக்காக கடந்த 1978ம் ஆண்டில் அறிமுகமான கபில் தேவ் 1994ம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். இதுவரையிலான காலகட்டத்தில் 131 டெஸ்ட், 225 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முறையே 5248 ரன்களும், 3783 ரன்களும் எடுத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் 434 விக்கெட்டுகளையும், ஒரு நாள் போட்டியில் 253 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.
தற்போது கபில் தேவ் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளித்து பேசி வருகிறார். அவ்வப்போது கிரிக்கெட் வர்ணனையிலும் ஈடுப்பட்டு வருகிறார். அவரது சொத்துமதிப்பு ரூ. 230 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கபில் தேவ் கடத்தப்பட்டது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Anyone else received this clip, too? Hope it’s not actually @therealkapildev 🤞and that Kapil Paaji is fine! pic.twitter.com/KsIV33Dbmp
— Gautam Gambhir (@GautamGambhir) September 25, 2023
கம்பீர் விளக்கம்
இந்த நிலையில், இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், "இந்த வீடியோவை வேறு யாராவது பெற்றுள்ளீர்களா?, அது உண்மையில் கபில் தேவ் இல்லை. கபில் தேவ் நலமாக இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கபில் தேவ் போன்று அசலான உருவமைப்பு கொண்ட ஒருவர் இருக்கிறார். அவரது வாயில் துணி கட்டப்பட்டுள்ளது. கைகள் இரண்டும் பின்புறம் இழுத்து கட்டுப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான ப்ரோமோ ஷூட்டின் போது எடுக்கப்பட்டது என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவையும் கம்பீர் வெளியிட்டுள்ளார். அதில் கிரிக்கெட் ரசிகர்களால் கபில் தேவ் கடத்தப்பட்டு இருப்பதும், அவரை விடுவிக்க போலீசார் பேச்சு வார்த்தை நடத்துவது போலும் காட்டப்படுகிறது. உலகக் கோப்பையை ஆன்லைனில் ஒளிபரப்பு செய்யும் ஹாட்ஸ்டார் இந்த ப்ரோமோ வீடியோவை தயாரித்துள்ளது.
Areh @therealkapildev paaji well played! Acting ka World Cup 🏆 bhi aap hi jeetoge! Ab hamesha yaad rahega ki ICC Men's Cricket World Cup is free on @DisneyPlusHS mobile pic.twitter.com/755RVcpCgG
— Gautam Gambhir (@GautamGambhir) September 26, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.