Advertisment

2027 உலகக் கோப்பையில் ரோகித், கோலி ஆடுவார்களா?: கம்பீர் 'நச்' பதில்

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இந்திய மூத்த வீரர்களிடம் இன்னும் நிறைய கிரிக்கெட்டுகள் இருப்பதாகவும், அவர்கள் உடற்தகுதியுடன் இருந்தால், 2027 உலகக் கோப்பையில் கூட ஆடலாம் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Gautam Gambhir on Rohit Sharma Virat Kohli playing 2027 ODI World Cup Tamil News

"நீங்கள் ஒரு பேட்டராக இருந்தால், நன்றாக பேட்டிங் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் எல்லா வடிவங்களிலும் விளையாடலாம்." என்று கவுதம் கம்பீர் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து, இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

Advertisment

இதன்படி, இந்திய டி20 அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் களமாடுவார்கள். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Gautam Gambhir on Rohit Sharma-Virat Kohli

இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இலங்கைக்கு இன்று (திங்கள்கிழமை) புறப்பட்டது. முன்னதாக, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது கவுதம் கம்பீர், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இந்திய மூத்த வீரர்களிடம் இன்னும் நிறைய கிரிக்கெட்டுகள் இருப்பதாகவும், அவர்கள் உடற்தகுதியுடன் இருந்தால், 2027 உலகக் கோப்பையில் கூட ஆடலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக கவுதம் கம்பீர் பேசுகையில், "பெரிய போட்டிகளில் தங்களால் என்ன வழங்க முடியும் என்பதை அவர்கள் (ரோகித் - கோலி) காட்டியுள்ளனர். அது டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, ஒருநாள் உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி. இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நமக்கு அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி இருக்கிறது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறோம். அதனால் அவர்கள் ஊக்கம் பெறுவார்கள். அவர்கள் தங்களது உடற்தகுதியைக் கடைப்பிடித்தால் 2027 உலகக் கோப்பையில் கூட ஆடலாம். அவர்களிடம் எவ்வளவு கிரிக்கெட் எஞ்சியிருக்கிறது என்று பதில் சொல்வது கடினம். சிறப்பாக ஆடும் வீரர்களைக் கொண்ட எந்தவொரு அணியும் அந்த வீரர்களை முடிந்தவரை வைத்திருக்க விரும்புகிறது.

முன்னோக்கிச் செல்லும்போது இந்த விஷயங்கள் (ஓய்வுகள்) நடக்கும். மூன்று வெவ்வேறு அணிகள் இருக்கும் என்று இப்போது சொல்ல முடியாது. டி20 உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் ஓய்வு பெறும் நிலையில் மாற்றம் ஏற்படும். இரண்டு ஃபார்மேட்களிலும் விளையாடக்கூடிய வீரர்களின் எண்ணிக்கை சிறந்தது.

ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒருவருக்கு பணிச்சுமை மேலாண்மை முக்கியம் என்று நான் முன்பே சொன்னேன். அவர் ஒரு அபூர்வ பந்துவீச்சாளர். அதைத் தான் எல்லோருமே விரும்புவர். அவர் முக்கியமான கேம்களை விளையாட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அதனால்தான் அவருக்கு மட்டுமல்ல, வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பணிச்சுமை மேலாண்மை முக்கியமானது,

நீங்கள் ஒரு பேட்டராக இருந்தால், நன்றாக பேட்டிங் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் எல்லா வடிவங்களிலும் விளையாடலாம். ரோகித்தும், விராட்டும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், இனி அவர்கள் மற்ற இரண்டு வடிவங்களில் விளையாடுவார்கள். பெரும்பாலான கேம்களுக்கு அவர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Virat Kohli Rohit Sharma Indian Cricket Team Gautam Gambhir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment