இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடர் நாளை மறுநாள் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. இதையடுத்து, இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்திய டி20 அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில் களமாடுவார்கள்.
டி20 உலகக் கோப்பையுடன் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், அவரது இடத்தை துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சூரியகுமாரை இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமனம் செய்து ஆச்சரியம் அளித்தது. இலங்கைக்கு புறப்படுவதற்கு முன் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஹர்திக் பாண்டியா ஏன் கேப்டனாக நியமிக்கப்படவில்லை என்பது குறித்தும், சூரியகுமார் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் அஜித் அகர்கர் கூறியிருந்தார்.
ரியான் பராக் இலங்கை தொடரில் தேர்வானது எப்படி?
அணித் தேர்வில் மற்றொரு பெரிய ஆச்சரியமாக, இளம் வீரர் ரியான் பராக் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டது பார்க்கப்படுகிறது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான அவர் இந்த மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய அணிக்காக அறிமுகமானார். மேலும் அவர் ஐந்து டி20 போட்டிகளில் இரண்டு முறை பேட் செய்தார். பெரிய அளவில் ரன்களை எடுக்கவிட்டாலும், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அவர் இந்திய அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இந்த முடிவு பலரின் புருவங்களை உயர்த்த செய்தது. குறிப்பாக ஜிம்பாப்வேயில் அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிஷேக் சர்மா கைவிடப்பட்ட சூழலில், அவர்கள் ரியான் பராக்கை தேர்வு செய்தார்கள்.
இந்த நிலையில், ரியான் பராக் ஏன் மீண்டும் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான மற்றொரு இளம் வீரரான திலக் வர்மா தற்போது காயமடைந்திருப்பதால், அவரது இடத்தில் ரியான் பராக் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ரியான் பராக் மிகவும் திறமையானவர், மேலும் விளையாட்டின் மீதான தனது அணுகுமுறையை பல நிலைகளில் மேம்படுத்தியுள்ளார். அவர் இப்போது விக்கெட்டைத் தொடர விரும்புகிறார். அவரது மதிப்பை அதிகரிக்க, அவர் கண்ணியமாக பந்துவீச முடியும், மேலும் துவக்கத்தில் ஒருநல்ல பீல்டர் ஆவார். தேர்வாளர்கள் எதிர்காலத்திற்காக அவரை வளர்க்க விரும்புகிறார்கள். அவரால் யார்க்கர்களை வீச முடியும், மெதுவாக பந்துகளை வீச முடியும் மற்றும் டெத் ஓவர்களின் போது மற்ற மாறுபாடுகளைப் பயன்படுத்த முடியும். இது அவரை ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஒரு நல்ல தேர்வாக ஆக்குகிறது, ”என்று முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்
திலக் வர்மா ஐ.பி.எல் (இந்தியன் பிரீமியர் லீக்) தொடருக்கான மும்பை இந்தியன்ஸில் சூர்யகுமார் யாதவுடன் இணைந்து விளையாடுகிறார். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.