Indian Cricket Team | BCCI | WV Raman | Gautam Gambhir: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த மே 13 ஆம் தேதி அழைப்பு விடுத்தது. இதற்கு ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு அடுத்த நாளான மே 27 அன்று காலக்கெடுவாக இருந்தது.
நேர்காணலுக்கு சென்ற டபிள்யூ.வி.ராமன் - கம்பீர்
இந்த நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த முன்னாள் இந்திய வீரர்களான கவுதம் கம்பீர் மற்றும் டபிள்யூ. வி ராமன் ஆகியோர் நேற்று செவ்வாய்கிழமை நேர்காணலுக்கு ஆஜராக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் ஜூம் வீடியோ கால் மூலம் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சி.ஏ.சி) முன் நேர்காணலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் இருவரையும் கிரிக்கெட் ஆலோசனைக் குழு தலைவர் அசோக் மல்ஹோத்ரா நேர்காணல் செய்துள்ளார்.
"ஆம், சி.ஏ.சி உடனான நேர்காணலுக்கு கம்பீர் ஆஜரானார். இன்று முதல் சுற்று நடந்தது. நாளை (புதன்கிழமை) மற்றொரு சுற்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்பீருக்குப் பிறகு ராமன் நேர்காணல் செய்யப்பட்டார். அதுவும் ஜூம் வீடியோ கால் மூலம் தான் நடந்தது. இந்திய கிரிக்கெட் குறித்த தனது பார்வை மற்றும் திட்டம் குறித்தும் அவர் விளக்கமளித்தார். அவருக்கு சுமார் 40 நிமிடங்கள் நேர்காணல் நடந்தது. விளக்கக்காட்சியைப் பார்ப்பதற்கு முன் குழுவிடம் சில ஆரம்பக் கேள்விகள் இருந்தன" என்று பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சி.ஏ.சி தலைவர் மல்ஹோத்ரா மற்றும் அவரது சகாக்களான ஜதின் பரஞ்ச்பே மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோருடன் அவர் தொடர்பு கொண்ட விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. பரஞ்ச்பே மற்றும் நாயக் இருவரும் மும்பையில் உள்ளனர். நேர்காணலின் போது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டபிள்யூ.வி.ராமன் மனதில் கொண்டுள்ள திட்டம் அதிக கவனம் ஈர்த்ததாக நம்பப்படுகிறது, இதில் மூன்று ஐசிசி போட்டிகள் ஃபார்மெட்டுகளும் அடங்கும்.
செவ்வாய்க்கிழமை மாலை அபெக்ஸ் கவுன்சில் கூட்டம் உள்ளது, இறுதி அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு பயிற்சியாளர் தேர்வு செயல்முறை உறுப்பினர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவிப்பார் என்று தெரிகிறது. வடக்கு மண்டல தேர்வாளர் பதவிக்கு ஆர்வமுள்ள சில விண்ணப்பதாரர்களை சி.ஏ.சி நேர்காணல் செய்கிறது.
கம்பீர் பற்றி டபிள்யூ.வி.ராமன் சூசக பதிவா?
இதற்கிடையில், கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சி.ஏ.சி) முன் நேற்று செவ்வாய்க்கிழமை தனது நேர்காணலை முடித்து விட்டு வந்த முன்னாள் இந்திய வீரரும், மகளிர் அணி முன்னாள் பயிற்சியாளருமான டபிள்யூ. வி. ராமன் தனது சமூக வலைதள பக்கத்தில் சூசகமாக பதிவிட்டுள்ளார். அது இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அவருடன் போட்டியிடும் சக போட்டியாளரான கவுதம் கம்பீர் பற்றி தான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
டபிள்யூ.வி.ராமன் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஓ டியர்" என்று பதிவிட்ட நிலையில், அதற்கு ரசிகர்கள் அவரின் நேர்காணல் எப்படி சென்றது? என்றும், அவர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வர வேண்டும் என்றும், இந்தப் பதிவு கம்பீர் பற்றியதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும், நேர்காணலுக்கு சென்ற அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு போட்டியிடும் ஒரே விண்ணப்பதாரர் கம்பீர் என்று நம்பப்படுகிறது. மேலும், அவரது பெயர் அறிவிப்பு வெறும் சம்பிரதாயம் மட்டுமே என்றும், இது அடுத்த 48 மணி நேரத்தில் நடக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Oh dear!!
— WV Raman (@wvraman) June 18, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.