Sunil Gavaskar Tamil News: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடர் இந்திய மண்ணில் நடந்து வருகிறது. இதில் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த முதலாவது டி-20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால், தொடரில் அந்த அணி 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை டி-20 தொடரில் விளையாடியது. அந்த தொடரில் நடந்த சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் அடுத்தடுத்த தோல்வியைச் சந்தித்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இந்த தோல்வியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மீளும் என எதிர்பார்க்கையில், அந்த அணிக்கு எதிரான முதலாவது டி-20 ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 209 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயித்த போதும், பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் கோட்டை விட்டதால் தோல்வி கண்டது. இதேபோல், இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த சில முடிவுகள் சில கவலையளிக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக, ரிஷப் பண்டுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கை அக்சர் பட்டேலுக்கு பின்னர் பேட்டிங் செய்ய அனுப்பியது அதிர்ச்சியைக் கொடுத்தது.
மேலும், இந்திய அணியில் தற்போது ஃபினிஷராக உருவெடுத்துள்ள அவரை தாமதமாக பேட்டிங் செய்ய களமிறங்கியது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இந்திய அணி நிர்வாத்தின் வியூகத்தை கடுமையாக சாடி பேசியுள்ள இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், கார்த்திக்கை தாமதமாக பேட்டிங் செய்ய களமிறங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் டுடே செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "தினேஷ் கார்த்திக் அக்சர் படேலை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று நீங்கள் நினைத்தால், அவர் 12வது அல்லது 13வது ஓவராக இருந்தாலும் பேட்டிங்கிற்கு வர வேண்டும். கடைசி 3-4 ஓவர்களில் மட்டும் அவர் விளையாடினால் போதும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அப்படி நீங்கள் வகுத்துள்ள கோட்பாட்டின்படியும் செல்லக்கூடாது,
கோட்பாட்டின்படி நடக்காமல் இங்கிலாந்து கிரிக்கெட் எப்படி மாறிவிட்டது என்று பார்த்தால், அவர்கள் இப்போது மிகவும் சுதந்திரமான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். இது நடந்தால் மட்டுமே இது நடக்கும் என்று அவர்கள் கோட்பாட்டின் அடிப்படையில் செல்லவில்லை. அவர்களின் கிரிக்கெட்டில் உள்ள வித்தியாசத்தையும் அவர்களின் வித்தியாசத்தையும் பாருங்கள். முடிவுகள், கோட்பாடுகளின் வலையில் அவர்கள் சிக்காமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும், அவர்கள் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையைப் பார்த்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.