ஜெர்மனியில் நடந்த தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் பளு தூக்கும் போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தேசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற புதுச்சேரியைச் சேர்ந்த அவரை தலைமை நீதிபதி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
Advertisment
புதுச்சேரி தீயணைப்புத் துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. அவரது மனைவி சுந்தரி தமிழக அரசு பள்ளி ஆசிரியையாப பணியாற்றி வருகிறார். புதுச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு கிராமத்தில் வசிக்கும் இந்த தம்பதியின் மகன் விஷால். குறை பிரசவத்தில் பிறந்ததால் அவர் மூளை வளர்ச்சி சற்று குறைவாக இருந்ததால் ஏழாம் வகுப்பு வரை நன்கு படித்து வந்தாலும் அதன்பிறகு பள்ளிக்கு செல்ல முடியவில்லை.
ஆனாலும் மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்படாத திருநாவுக்கரசு-சுந்தரி தம்பதியர் மகனுக்கு பளு தூக்குவதில் ஆர்வம் இருப்பதை அறிந்து, கடந்த ஆறு வருடங்களாக நைனார் மண்டபத்தில் உள்ள டே பிரேக்கர் உடற்பயிற்சி கூடத்தில் பளுத்தூக்கும் பயிற்சியை அளித்து வருகின்றனர். உள்ளூரில் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற இவர் தொடர்ந்து 6 வருடங்கள் எடுத்த பயிற்சினால் ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்றார்.
Advertisment
Advertisements
261 நாடுகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்க குவிந்தாலும் இந்தியா சார்பில் பங்கேற்ற விஷால் நாட்டிற்கே பெருமை தேடி தந்துள்ளார். முதல் முறையாக இந்தியாவிற்கு 4 வெள்ளிப் பதக்கங்களை இவர் வென்றுள்ளார். தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற விஷால் "இரும்பு மனிதன்" பட்டத்தையும் பெற்றுள்ளார்.
நாட்டிற்கே பெருமை தேடி தந்துள்ள விஷால் புதுச்சேரி திரும்பியுள்ள நிலையில், அவருக்கு புதுச்சேரி-விழுப்புரம் மாவட்டத்தில் மேளதாளம் முழங்க ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்து ஊர் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அளவில் அவர் பெருமை தேடி தந்துள்ளார்.புதுச்சேரியில் முதல்முறையாக தனிநபர் பிரவில் சாதனைபடுத்துள்ளதாக பயிற்சியாளர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த புதுச்சேரியில் தலைமை நீதிபதியான செல்வநாதன் விளையாட்டு வீரர் விஷாலையும் அவரது பயிற்சியாளாரான பாக்கியராஜையும் தனது அறையில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”