நடந்து முடிந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் டிராவானது. இதில், 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா தோல்வியடைய முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்யின் அவறான முடிவுதான். டிம் பெய்ன் தேவையில்லாமல் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தி அதை வீணடிக்க, முக்கியமான கட்டத்தில் நாதன் லயன் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸின் காலில் படும்போது எல்பிடபிள்யூ அப்பீல் கேட்டனர்.
பந்து ஸ்டம்பை தாக்குவதுபோல் இருந்தாலும் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. அம்பயர் முடிவை எதிர்த்து கேட்க டிஆர்எஸ் வாய்ப்பு இல்லாததால் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியது.
அதேபோல், ஓவலில் நடைபெற்ற கடைசி போட்டியில், 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்ஸ்டேன் ஜோ டென்லி 54 ரன்கள் எடுத்திருக்கும்போது மிட்செல் மார்ஷ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். நடுவர் அவுட் கொடுக்கவில்லை. மிட்செல் மார்ஷ் டிஆர்எஸ் கேட்கலாம் என்றார். ஆனால் டிம் பெய்ன் டிஆர்எஸ் கேட்கவில்லை. இதனால் அவுட்டில் இருந்து தப்பித்த டென்லி 94 ரன்கள் சேர்த்தார்.
ஜோஸ் பட்லர் 19 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். நாதன் லயன் ரிவியூ கேட்க விரும்பினாலும் கேப்டனான டிம் பெய்ன் விரும்பவில்லை. பின்னர் ரீ-பிளேயில் அவுட் என்பது தெளிவாக தெரிந்தது.
இதுபோன்ற தவறுகளால் கடைசி போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.
பத்திரிகையாளர்களை சந்தித்த டிம் பெய்ன், "நான் டிஆர்எஸ் வாய்ப்பை தவறாக கையாண்டு விட்டேன். இதைப்பற்றி எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அம்பயரிங்கை, பள்ளிக்கு சென்று தான் கற்க வேண்டும் போல. அதை நினைத்தாலே எங்களுக்கு விரும்பத்தகாக நிழ்வாக உள்ளது. ஒட்டுமொத்தமாக நாங்கள் தவறு செய்து விட்டோம். டெஸ்ட் போட்டிகளில் நடுவர்கள் வேலை மிகவும் கடினமானது. அந்த கடினமான வேலையை செய்யும் நடுவர்கள் மீது எனக்கு தற்போது புதிய மரியாதை ஏற்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, "தோனிக்கு ஒரு கால் கொடுங்கள். அவர் மாணவர்களுக்கு பாடம் எடுக்க தயாரா என்று பார்ப்போம். DRS என்பது தோனி ரிவியூஸ் சிஸ்டம்" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Give a call to Dhoni. See if he’s ready to take students ???????? Dhoni Review System. https://t.co/kcfuH1S6tQ
— Aakash Chopra (@cricketaakash) September 15, 2019
தோனியின் ரிவியூ பற்றி ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?
இந்திய அணியில் எத்தனை கேப்டன்கள் வந்தாலும், விக்கெட் கீப்பிங்கில் தோனி இருக்கும் வரை, அவரது DRS அப்பீலுக்கு மறு அப்பீலே இருக்க முடியாது!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.