அடிலெய்டு சம்பவம்... மேக்ஸ்வெல் மீது விசாரணை நடத்தும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்!

அடிலெய்டு சம்பவம் தொடர்பாக நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரரான கிளென் மேக்ஸ்வெலிடம் விசாரணை நடத்தி வருவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அடிலெய்டு சம்பவம் தொடர்பாக நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரரான கிளென் மேக்ஸ்வெலிடம் விசாரணை நடத்தி வருவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Glenn Maxwell under investigation by Cricket Australia for Adelaide incident Tamil News

கிளென் மேக்ஸ்வெல், அடிலெய்டில் இரவு விருந்துக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விசாரணை.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Glenn Maxwell: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக விளையாடி வருபவர் கிளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ நடத்தும் 'சிக்ஸ் அண்ட் அவுட்' என்ற இசை நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்துகொண்டுள்ளார். அப்போது நள்ளிரவில் நடந்த விருந்தில் மது அருந்திவிட்டு இசையை ரசித்துள்ளார். 

Advertisment

இதனிடையே, மேக்ஸ்வெல்லுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பிறகு சில மணி நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அடிலெய்டு சம்பவம் தொடர்பாக  நட்சத்திர ஆல்ரவுண்டர் வீரரான கிளென் மேக்ஸ்வெலிடம் விசாரணை நடத்தி வருவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'மேக்ஸ்வெல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் எங்களுக்கு தெரியும். இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிட்டு இருக்கிறோம். சமீபத்தில் அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பணிச்சுமையே காரணம். மற்றபடி தற்போதைய சம்பவத்துக்கும், நீக்கத்துக்கும் தொடர்பில்லை. அவர் 20 ஓவர் போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை' என்று கூறியுள்ளார். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Glenn Maxwell

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: