மேக்ஸ்வெல் அனுபவித்த ‘இந்திய நிச்சயதார்த்தம்’ – காதலியை விட ரொம்ப வெட்கப்படுறாப்ல! (வீடியோ)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் அவரது நீண்ட நாள் காதலி வினி ராமன் என்ற இந்திய வம்சாவழிப் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல். பவுலர்களை ஈவு இரக்கமின்றி அடித்து விளாசும் மேக்ஸ்வெல், வினி ராமனின் காதல் வலையில் சிக்கினார். கொக்கரிக்கும் கொரானா – ‘போடா டேய்’ மோடில் தோனி (வீடியோ) வினி ராமன், தென்னிந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்றாலும், மெல்போர்னில் பிறந்து வளர்ந்தவர். சுவாரஸ்யமாக, […]

Glenn Maxwell’s ‘Indian engagement’ with girlfriend Vini Raman
Glenn Maxwell’s ‘Indian engagement’ with girlfriend Vini Raman

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் அவரது நீண்ட நாள் காதலி வினி ராமன் என்ற இந்திய வம்சாவழிப் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல். பவுலர்களை ஈவு இரக்கமின்றி அடித்து விளாசும் மேக்ஸ்வெல், வினி ராமனின் காதல் வலையில் சிக்கினார்.

கொக்கரிக்கும் கொரானா – ‘போடா டேய்’ மோடில் தோனி (வீடியோ)

வினி ராமன், தென்னிந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் என்றாலும், மெல்போர்னில் பிறந்து வளர்ந்தவர். சுவாரஸ்யமாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் இன்ஸ்டாகிராமில் தனது ஃபாலோவர்களிடம் ஒரு கேள்வி பதில் அமர்வில், ​​ஒருவர் அவரிடம் பிடித்த தமிழ் படம் எது என்று கேட்டார். அதற்கு அவர் ‘படையப்பா’ என்று கூறினார். மேலும், சூப்பர் ஸ்டார் ராஜின்காந்த் – நடித்த அந்தப் படத்தின் ஆங்கில சப்டைட்டில் உடன் நல்ல தரமான டிவிடி கிடைத்தவுடன், அதை மேக்ஸ்வெல்லை பார்க்க வைப்பார் என்றும் கூறினார்.

இந்நிலையில், தங்களது நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியின் புகைப்படங்களை வினி ராமன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதில், “நேற்றிரவு நாங்கள் எங்கள் இந்திய நிச்சயதார்த்தத்தை கொண்டாடினோம், திருமணம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு சிறிய டீஸரை கொடுத்தேன்.

சில அழகான ஆச்சரியமான நபர்களால் சூழப்பட்டதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மாப்பிள்ளையாகும் மேக்ஸ்வெல்-க்கு வாழ்த்துகள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Glenn maxwells indian engagement with girlfriend vini raman

Next Story
கொக்கரிக்கும் கொரானா – ‘போடா டேய்’ மோடில் தோனி (வீடியோ)corona threat dhoni badminton video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com