நியூசிலாந்து சுற்றுப்பயணமாக சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நேற்று திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 348 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் ஆடி வரும் இங்கிலாந்து 64 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. சதம் விளாசியிருக்கும் ஹாரி புரூக் 113 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 12 ரன்னுடனும் களத்தில் ஆடி வருகிறார்கள். 2ம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை விட இங்கிலாந்து 87 ரன்கள் பின்தங்கியுள்ளது.
சூப்பர்மேன் போல் பறந்து கேட்ச் பிடித்த க்ளென் பிலிப்ஸ்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஒல்லி போப் அடித்த பந்தை மிரட்டலான கேட்ச் எடுத்துள்ளார் நியூசிலாந்தின் க்ளென் பிலிப்ஸ். இங்கிலாந்து அணியின் டாப் ஆடர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், ஒல்லி போப் - ஹாரி புரூக் ஜோடி அணியின் விக்கெட் சரிவை மீட்டெடுத்தனர். மேலும், இருவரும் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
இவர்களது விக்கெட்டை வீழ்த்த நியூசிலாந்து பவுலர்கள் கடுமையாக போராடிய நிலையில், . இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் அரைசதம் விளாசிய க்ளென் பிலிப்ஸ் 87 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 58 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“