ஏறக்குறைய எட்டு மாதங்களுக்குப் பிறகு போட்டியிடும் விஸ்வநாதன் ஆனந்த், ஜான்-கிரிஸ்டோஃப் டுடாவை தோற்கடித்து கங்கை கிராண்ட்மாஸ்டர் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
Global Chess League - Ganges Grandmasters vs Chingari Gulf Titans Tamil News: முதலாவது குளோபல் செஸ் லீக் போட்டிகள் நேற்று முன்தினம் புதன்கிழமை (21ம் தேதி) முதல் துபாயில் உள்ள செஸ் மற்றும் கலாச்சார கிளப்பில் தொடங்கியது. வருகிற ஜூலை 2ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில் எஸ்.ஜி ஆல்பைன் வாரியர்ஸ், கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ், திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், பாலன் அலாஸ்கன் நைட்ஸ், அப்கிரேடு மும்பா மாஸ்டர்ஸ், சிங்காரி கல்ஃப் டைட்டன்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் களமாடுகின்றன.
Advertisment
இந்நிலையில், நேற்று நடந்த ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் மற்றும் சிங்காரி கல்ஃப் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணி தரப்பில் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் 4 முறை மகளிர் உலக சாம்பியனான ஹூ யிஃபானும், சிங்காரி கல்ஃப் டைட்டன்ஸ் அணியின் போலந்து செஸ் கிராண்ட்மாஸ்டர் ஜான்-கிரிஸ்டோஃப் டுடா மற்றும் ரஷ்ய-சுவிஸ் செஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனியுக்குடன் மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் கங்கேஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணி 10-4 என்ற புள்ளிகள் கணக்கில் சிங்காரி கல்ஃப் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
5 முறை ஆடவர் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் 4 முறை பெண்கள் உலக சாம்பியனான ஹூ யிஃபான் தலைமையிலான கங்கை கிராண்ட்மாஸ்டர்ஸ் 10-4 என்ற கோல் கணக்கில் சிங்காரி கல்ஃப் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. (புகைப்படம் உதவி: குளோபல் செஸ் லீக்)
Advertisment
Advertisements
இதில் சிறப்பு என்னவென்றால், விஸ்வநாதன் ஆனந்த் ஏறக்குறைய எட்டு மாதங்களுக்குப் பிறகு விளையாடிய போட்டி இதுவாகும். இந்தப் போட்டியில் ஜாம்பவான் வீரரான அவர் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய 35 வயதான விஸ்வநாதன் ஆனந்த், "இது ஒரு நல்ல போட்டி. அதில் நான் மிகவும் பெருமைப்பட்ட சில பகுதிகள் இருந்தன. ஆனால் ஒன்று அல்லது இரண்டு தவறான நகர்வுகள் நழுவுவதை நான் கவனித்தேன். குறிப்பாக நான் அவற்றை உருவாக்கிய பிறகு. நீங்கள் அவற்றை உருவாக்கி, பின்னர் உணர்ந்து, 'இன்னொரு நகர்வை நான் முன்பே பார்த்திருக்க விரும்புகிறேன்'.
ஜான்-கிரிஸ்டோஃப் டுடா இந்த ஆண்டு நம்பமுடியாத அளவிற்கு நன்றாக விளையாடுகிறார் என்று நீங்கள் சொல்ல வேண்டும். அவர் சரியாக தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் எனது வெற்றிக்கு மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் டுடாவுக்கு எதிராக வெற்றி பெற்றது மிகவும் நன்றாக இருந்தது." என்று அவர் கூறினார்.
“Chess and cricket have a lot of similarities. In cricket, you have to be strategic and proactive, just like you have to be in Chess.”