Gold Rate | today gold price | business: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 480 அதிகரித்தது. ஆனால், மறுநாள் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 1000 சரிந்தது. இதேபோல், நேற்று 2வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ஒரு சவரன் ரூ.46,520-க்கும், கிராமுக்கு ரூ. 35 சரிந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 5,815-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.46,520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,344-க்கும், ஒரு சவரன் ரூ.50,752-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி ரூ.81.-க்கும், ஒரு கிலோ ரூ.81,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“