Gold-rate: இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று திங்கள் தங்கம் விலை ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,640-க்கும், கிராமுக்கு ரூ. 20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,830-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் சரிந்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,349-க்கும், ஒரு சவரன் ரூ.50,792-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“