'புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சம்மேளன உறுப்பினர்கள் முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது' என்று குறிப்பிட்டு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இன்று (டிச.24) ஞாயிற்றுக் கிழமை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை (WFI) சஸ்பெண்ட் செய்வதாக உத்தரவிட்டது.
வலுவான வார்த்தைகளைக் கொண்ட அந்த அறிக்கையில், முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் தலைமையிலான புதிய கூட்டமைப்பு, 'வகுக்கப்பட்ட சட்டம் மற்றும் நடைமுறை விதிமுறைகளை வெளிப்படையாக மீறியதாக' அமைச்சகம் குற்றம் சாட்டியது.
சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளில் மிகவும் தாமதமான முறையில் நடந்த தேர்தல்களுக்குப் பிறகு
கடந்த வியாழன் அன்று பா.ஜ.க எம்.பி முன்னாள் சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் ஆதரவளாரான சஞ்சய் சிங் தலைமையிலான குழு, புதிய உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர் நியமிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, சஞ்சய் சிங், பிரிஜ் பூஷனின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். அவரது இல்லம் இந்திய சம்மேளன அலுவலகமாகவும் உள்ளது.
அமைச்சகம் அறிக்கையில், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதாகக் கூறப்படும் வளாகத்தின் இந்த வணிகம் நடந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது என்றும் கூறியது.
இது தவிர, 15 வயதுக்குட்பட்ட மற்றும் 20 வயதுக்குட்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை பிரிஜ் பூஷனுக்கு சொந்தமான கோண்டாவில் நடத்துவதற்கான சஞ்சய் சிங்கின் முடிவும் அமைச்சகத்தை எரிச்சலடையச் செய்தது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/sports/sport-others/govt-suspends-wrestling-federation-new-body-complete-control-former-office-bearers-9080900/
சஞ்சய் சிங்கின் நியமனத்தை மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். மேலும், நியமனத்தை எதிர்த்து, இந்தியாவிற்காக ஒலிம்பிக் பதக்கம் வென்று தந்த சாக்ஷி மாலிக், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கண்ணீர் மல்க அவர் அறிவித்தது நாடு முழுவதும் அதிர்வலையையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது, அதோடு வீராங்கனைகளுக்கு ஆதரவாக பஜ்ரங் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“