India vs England: இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் களமாடியவர் கிரேம் ஸ்வான். கடந்த 2000 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் அறிமுகமான இவர் 60 டெஸ்ட் போட்டிகளில் 7,642 ரன்களையும், 255 விக்கெட்டுகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் 2,888 ரன்களையும், 104 விக்கெட்டுகளையும், 39 டி20 போட்டிகளில் இருந்து 859 ரன்கள் மற்றும் 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
2013 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற கிரேம் ஸ்வான் தற்போது கிரிக்கெட் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தான் பந்துவீச விரும்பாத இந்திய வீரர் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்டுக்கான போட்காஸ்டில் அவர் பேசுகையில், "பவுலிங் செய்வதை நான் விரும்பாத ஒரு பேட்டர் (சேதேஷ்வர்) புஜாரா. ஏனெனில், அவரது கால்களை மிகவும் வேகமாக நகர்த்தக்கூடியவர். விவிஎஸ் லக்ஷ்மன், வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் . விராட் கோலி என அவர்கள் இருந்த அணியை திரும்பிப் பார்க்கும்போது விசித்திரமாக இருக்கிறது. இதில், நான் பந்துவீசுவதை விரும்பாத வீரர் என்றால் அது புஜாரா தான்" என்று கிரேம் ஸ்வான் கூறியுள்ளார்.
2012ல் இந்தியாவில் நடந்த புகழ்பெற்ற இங்கிலாந்து தொடரை வென்றதில் ஸ்வான் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கியப் பங்காற்றினார் என்பது குறிபிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Not Virat Kohli, Sachin Tendulkar or Virender Sehwag: Graeme Swann reveals Indian batter he didn’t like to bowl to
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“