அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் : செரீனாவுக்கு தொடர் சருக்கல்… ஆண்கள் பிரிவில் ரஃபேல் வெற்றி

நான்காவது முறையாக அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

By: Published: September 9, 2019, 8:21:53 AM

Grand Slam US Open singles finals :  விம்பிள்டன், ஃப்ரெஞ்ச் ஓப்பன், ஆஸ்திரேலிய ஓப்பன் மற்றும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் என்று ஆண்டுக்கு நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும். ஆண்டின் இறுதியில் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

Grand Slam US Open singles finals : பெண்கள் ஒற்றையர் பிரிவு

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் நேற்று கனடாவின் பயன்கா ஆண்ட்ரிஸ்குவை எதிர்த்து போட்டியிட்டார். 19 வயதான பயன்கா நேற்று செரினா வில்லியம்ஸை வீழ்த்தி பட்டம் பெற்றுச் சென்றார். செரீனா வில்லியம்ஸ் 2017ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிகளில் வெற்றி பெற்ற பின்பு, எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் பெறவில்லை. 7 முறை ஃபைனல்ஸ் சென்றும் தோல்வியை தழுவியிருக்கிறார் செரினா வில்லியம்ஸ்.

Grand Slam US Open singles finals Rafael Nadal, Bianca Andreescu கோப்பையுடன் பயன்கா

2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு குழந்தைக்கு தாயான பின்பு இரண்டு விம்பிள்டன் மற்றும் ஒரு யூ.எஸ். ஓப்பன் போட்டிகளிலும் பைனல் வரைக்கும் வந்து தன்னுடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். நேற்றைய அதிகாலை ஆட்டத்தில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் செரினாவை வீழ்த்தி பட்டத்தை வென்றார் 24 வது இடத்தில் இருக்கும் பயன்கா.

Grand Slam US Open singles finals Rafael Nadal, Bianca Andreescu சர்வீஸ் செய்யும் செரீனா வில்லியம்ஸ்

Grand Slam US Open singles finals : ஆண்கள் ஒற்றையர் பிரிவு

ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ்வுடன் இன்று காலை மோதினார். 2ம் நிலை வீரரான ரஃபேல் நடால் 5வது இடத்தில் இருக்கும் டேனிலுடன் பலப்பரீட்சை நடத்தி முதல் இரண்டு செட்களை தன் வசம் வைத்தார். மூன்றாவது மற்றும் நான்காவது செட்களில் டேனிலின் கை ஓங்கியிருந்தது. வெற்றியை நிர்ணயிக்கும் அந்த ஒற்றை செட்டினை கைப்பற்றி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் நடால்.

Grand Slam US Open singles finals Rafael Nadal, Bianca Andreescu 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெற்றியை தக்க வைத்த ரஃபேல் நடால்

5 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவின் டேனிலை 7-5, 6-3,5-7,4-6 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இது ரபேல் நடாலில் 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். நான்காவது முறையாக அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : புரோ கபடியில் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி: அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Grand slam us open singles finals rafael nadal beats daniil medvedev bianca andreescu beats serena williams

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X