Grandmaster Iniyan Panneer Selvam clinches World Open Chess title : ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் இனியன் பன்னீர்செல்வம். 17 வயதான இவர் தன்னுடைய 5 வயது முதல் சதுரங்கம் விளையாட்டை விளையாடி வருகிறார். ஏற்கனவே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்திய இவர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க வேர்ல்ட் ஓப்பன் சதுரங்க போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளார்.
சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் தொடர்பான சுவாரசியமான செய்திகள், லைஃப்ஸ்டைல், ஆரோக்கியம், வைரல் வீடியோ என அனைத்தையும் கொள்ள திரைஜாலம் பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள் வாசகர்களே
#IETamil #thiraijaalam
https://www.facebook.com/IETamilThiraiJaalam/
அவரை வாழ்த்தும் விதமாக தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”2020 அமெரிக்க வேர்ல்ட் ஓப்பன் சதுரங்க போட்டியில், முதலிடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த இனியன் பன்னீர்செல்வத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். மேலும் அதில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள இனியன் மேலும் பல்வேறு வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to Iniyan Panneerselvam on winning the annual World Open chess tournament.
2020 அமெரிக்க வேர்ல்ட் ஓப்பன் சதுரங்க போட்டியில், முதலிடம் பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த இனியன் பன்னீர்செல்வத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
1/2 pic.twitter.com/ihTblBouCh— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 5, 2020
இந்தியாவை சேர்ந்த ஒருவர் இந்த போட்டிகளில் முதலிடம் பிடிப்பது இதுவதே முதல்முறையாகும். கடந்த மாதமே போட்டிகள் முடிவுற்ற போதும் ஃபேர் ப்ளே அனலசிஸ் முடிவுற்ற பிறகு வியாழக்கிழமை முடிவுகள் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் பிலடெல்ஃபியாவில் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகள் இம்முறை ஆன்லைனில் நடைபெற்றது.
மேலும் படிக்க : ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து வெளியேறினார் ஹர்பஜன் சிங்! சறுக்கும் சி.எஸ்.கே…
ஈரோடு மற்றும் சேலத்தில் பயிற்சி பெற்ற அவர் மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். 2016ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் பெற்றார். இந்தியாவின் 61வது செஸ் கிராண்ட்மாஸ்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Grandmaster iniyan panneer selvam clinches world open chess title
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!