Advertisment

சிறந்த ஸ்பின் ஆல்-ரவுண்டர்கள்... ஆஸி., டிரஸ்ஸிங் ரூமில் இந்திய வீரர்கள் பெயர் - வைரல் போட்டோ!

ஆஸ்திரேலியாவின் டிரஸ்ஸிங் ரூமில் சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Greatest spin all rounders in Australian dressing room Image goes viral Tamil News

எல்லா காலத்திலும் மிகச் சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் பட்டியல் ஆஸ்திரேலிய டிரஸ்ஸிங் ரூமில் பகிரப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Australia: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. 

Advertisment

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் பாக்ஸிங் டே போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் 187 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் டிரஸ்ஸிங் ரூமில் சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

பல ஆண்டுகளாக, கிரிக்கெட் உலகம் பல சிறந்த ஆல்-ரவுண்டர்களைக் கண்டுள்ளது. அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் விதிவிலக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். மேலும், அவர்கள் எல்லா காலத்திலும் மிகச் சிறந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

அவ்வகையில், எல்லா காலத்திலும் மிகச் சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் பட்டியல் ஆஸ்திரேலிய டிரஸ்ஸிங் ரூமில் பகிரப்பட்டுள்ளது. பலகையில் எழுதப்பட்ட அந்தப் பெயர்களுடன் ஸ்டீவ் ஸ்மித் முன்னால் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்தப் பட்டியலில் டேனியல் வெட்டோரி, கார்பீல்ட் சோபர்ஸ், ரவீந்திர ஜடேஜா, ஷாகிப் அல் ஹசன், ஆர் அஷ்வின், டிராவிஸ் ஹெட், சமித் படேல் மற்றும் அக்சர் படேல் போன்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

பல ஆண்டுகளாக, அஷ்வின் மற்றும் ஜடேஜா போன்றவர்கள் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு பெரும் தலைவலியாக இருந்துள்ளனர். அவர்களது ஆல்ரவுண்டர் திறன் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி வாகை சூட பெரிதும் உதவியுள்ளனர் என்பது குய்ப்பிடத்தக்கது. 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment