/indian-express-tamil/media/media_files/bNvlxy0KAnECAprfDKeN.jpg)
பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக் கோப்பையை யாரின் தலைமையிலான அணி வெல்லும் என்பதையும் கச்சிதமாக கணித்து இருந்தார்.
Worldcup 2023 | indian-cricket-team | rohit-sharma: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் மல்லுக்கட்டுகிறது.
உலகக் கோப்பையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டில் பிறந்த கேப்டனின் தலைமையிலான அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். இவர் முன்னதாக, டென்னிஸ் மற்றும் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை வென்ற வீரர்கள் மற்றும் அணிகளை சரியாக கணித்து இருந்தார். இதேபோல் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக் கோப்பையை யாரின் தலைமையிலான அணி வெல்லும் என்பதையும் கச்சிதமாக கணித்து இருந்தார்.
இந்த நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடரை 1987ல் பிறந்த கேப்டன் வெல்வார் என்று பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். அவர் கணித்துள்ளதுபடி, வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் 1987, மார் 24ஆம் தேதி பிறந்தவர். இதேபோல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 1987, ஏப்ரல் 30ஆம் தேதி பிறந்தவர். இதனால், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் உலகக் கோப்பையை வசப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.