Advertisment

'ஓம் சக்தி, சமயபுரத்து மகமாயி': சி.எஸ்.கே வெற்றி பெற உருக்கமாக வேண்டிய ரசிகர் - வீடியோ

குஜராத்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற உருக்கமாக வேண்டிய ரசிகர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

author-image
WebDesk
May 30, 2023 17:52 IST
GT vs CSK, IPL 2023 Final, CSK fan praying to samayapurathu mahamayi video Tamil News

CSK fan praying to samayapurathu mahamayi - GT vs CSK, IPL 2023 Final,

Chennai Super Kings winIPL trophy for 5th time Tamil News: 16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

Advertisment

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற போட்டி மழை காரணமாக 1 நாள் தாமதமாக போட்டி நேற்று நடத்தப்பட்டது. போட்டியின் போது மழை குறுக்கிடலாம் என்ற நிலையால் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்களை எடுத்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்களும், சாஹா 54 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் சாஹர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

publive-image

தொடர்ந்து 215 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த சென்னை அணி களம் இறங்கிய 3 பந்துகளை சந்தித்த நிலையில், மழை மீண்டும் புகுந்து விளையாடியது. அதனால், நீண்ட நேரம் போட்டி தடைபட்டது. ஒரு வழியாக மழை தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வந்தனர். முன்னதாக, நடுவர்களின் கள ஆய்வுக்குப்பின் ஆட்டம் 20 ஓவர்களில் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டது. போட்டி மீண்டும் 12: 10 மணிக்கு தொடங்கும் என்றும் சென்னை அணிக்கு வெற்றி இலக்காக 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சென்னை அணி அதன் இலக்கை துரத்தி வேகமாக சென்றுகொண்டிருந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், அணியின் வேகம் குறையவில்லை. இறுதியாக 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போது, ஆல்ரவுண்டர் வீரரான ஜடேஜா முதல் பந்தை சிக்சர் பறக்கவிட்டார். அது வரையில் சென்னை ரசிகர்கள் மட்டும் பதற்றத்தில் இருந்த நிலை மாறி கடைசி பந்தில் இரு அணி ரசிகர்களும் பதற்றத்தின் உச்சத்திற்கு சென்றனர். பிறகு, கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜடேஜா அந்த பந்தை லாவகமாக பவுண்டரிக்கு தட்டிவிட்டு சென்னை அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்ற உதவி செய்தார்.

publive-image

உருக்கமாக வேண்டிய ரசிகர்

இந்நிலையில், கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற போது ரசிகர் ஒருவர் டி.வி-யில்போட்டியை பார்த்தபடி சாமி கும்பிடுவதும், சென்னை அணி வெற்றி பெற்றதும் உணர்ச்சி பெருக்கில் சத்தம் போடும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

அந்த வீடியோவில் ரசிகர், டிவி முன்பு சென்று சக்தி உள்ள தெய்வமா இருந்தா இந்த ஒரு பால்ல ஜெயிக்கனுமா..ஓம் சக்தி…ஓம் சக்தி சமயபுரத்து மகமாயி.. மகமாயி டோனியோட கடைசி கேம்மா… என்று உருக்கமாக வேண்டிக்கொண்டார். ஜெயித்த உடன் உணர்ச்சி பெருக்கில் அவர் கத்தினார். இதை பார்த்த அந்த சென்னை ரசிகர், உற்சாக மிகுதியில் கத்தி கூச்சலிட்டார். சாமிக்கு அருள் வந்தது போல் ஆத்தா…ஆத்தா…ஆத்தா என கத்தினார். அவரை சமாதானம் செய்யவே ஒருவர் ஓடிவந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Viral Video #Cricket #Sports #Viral #Chennai Super Kings #Gujarat Titans #Ipl Finals #Video #Ipl News #Ipl Cricket #Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment