CSK vs GT IPL 2023 Final Updates: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று (ஞாயிற்று கிழமை) இரவு 7:30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்க இருந்தது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி – 4 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவிருந்தன. ஆனால், போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மழை பெய்ய தொடங்கியது.
முதலில் மிதமான மழை அடுத்து கனமழை பின்னர் மிதமான மழை என விட்டு விட்டு வெளுத்து வாங்கியது. இதனால், போட்டி நடக்கவிருந்த அகமதாபாத் மைதானம் குட்டி குளம் போல் காட்சியளித்தது. இரவு 9:45 மணிக்குப் பிறகு ஓவர்கள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, 9:45 மணிக்கு 19 ஓவர், 10 மணிக்கு 17 ஓவர், 10:30 மணிக்கு 15 ஓவர்கள் வீசப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தொடர் மழை காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, குஜராத் - சென்னை அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு மீண்டும் தொடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:00 (IST) 28 May 2023சோதனை மேல் சோதனை... விடாமல் பெய்யும் மழை; ஓவர்கள் இழப்பு
குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடக்கும் அகமதாபாத்தில் விட்டு விட்டு பெய்து வருகிறது. அதனால், இரவு 9:45 மணிக்குப் பிறகு ஓவர்கள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9:45 மணிக்கு 19 ஓவர், 10 மணிக்கு 17 ஓவர், 10:30 மணிக்கு 15 ஓவர்கள் வீசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 20:48 (IST) 28 May 2023தொடரும் கனமழை!
ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடக்கும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
Rain getting heavier in Narendra Modi Stadium. pic.twitter.com/Cj0AlhCSKI
— Johns. (@CricCrazyJohns) May 28, 2023 - 19:37 (IST) 28 May 2023இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா?
2022ல் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் இருந்தது. ஆனால் பிசிசிஐ வெளியிட்ட பிளேஆஃப் அட்டவணையின்படி ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் இல்லை.
இந்நிலையில், இன்றைய போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9.35 மணி வரை ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. மேலும், 5 ஓவர்கள் கொண்ட ஆட்டத்திற்கான கட்-ஆஃப் நேரம் நள்ளிரவு 12.06 ஆகும்
- 19:35 (IST) 28 May 2023இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா?
2022ல் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் இருந்தது. ஆனால் பிசிசிஐ வெளியிட்ட பிளேஆஃப் அட்டவணையின்படி ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் இல்லை.
இந்நிலையில், இன்றைய போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9.35 மணி வரை ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. மேலும், 5 ஓவர்கள் கொண்ட ஆட்டத்திற்கான கட்-ஆஃப் நேரம் நள்ளிரவு 12.06 ஆகும்
- 19:08 (IST) 28 May 2023அகமதாபாத்தில் தொடர்ந்து கொட்டும் மழை: டாஸ் போடுவதில் தாமதம்!
ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
expresssports | sportsupdate || அகமதாபாத்தில் தொடர்ந்து கொட்டும் மழை: டாஸ் போடுவதில் தாமதம்!gtvcsk | cskvgt | ipl2023final
— Indian Express Tamil (@IeTamil) May 28, 2023
லைவ் அப்டேட்ஸ்... https://t.co/iTbZEc61zs pic.twitter.com/ALl4olKIaC - 19:02 (IST) 28 May 2023அகமதாபாத்தில் இடி மின்னலுடன் மழை: இறுதிப்போட்டியை பாதிக்குமா?
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. அதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசியதால் மைதானத்தைச் சுற்றிலும் கை ரோலர்களை மூடி வைத்துள்ளனர். மழைத் தாள்களின் விளிம்பில் மைதான வீரர்கள் நிற்கிறார்கள். டாஸ் போடுவதற்கு முன்னதாகவே நிறைவு விழாவை நடத்த வேண்டும் என்பது நினைவுகூரத்தக்கது.
- 18:41 (IST) 28 May 2023இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்!
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ரஷித் கான், ராகுல் திவேதியா, நூர் அகமது, முகமது ஷமி, மொகித் ஷர்மா.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ஷிவம் துபே, ரஹானே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்ஷனா.
- 18:35 (IST) 28 May 2023CSK vs GT: ஐ.பி.எல் ஃபைனலுக்கு மழை மிரட்டல் இருக்கிறதா? போட்டி பாதித்தால் விதிமுறை என்ன?
இரு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்களுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒரு முடிவை அடைய முடியும்.
- 18:34 (IST) 28 May 2023கருமேகம் சூழந்த அகமதாபாத் மைதானம்!
சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
expresssports | sportsupdate || கருமேகம் சூழந்த அகமதாபாத் மைதானம்!gtvcsk | cskvgt | ipl2023final | 📸 @nirmalharindran https://t.co/iTbZEc61zs pic.twitter.com/3wEbo3Q2Ng
— Indian Express Tamil (@IeTamil) May 28, 2023 - 18:28 (IST) 28 May 2023சி.எஸ்.கே vs குஜராத் ஃபைனல்: அங்கே கில், ரஷித் கான்; இங்கே பதிலடி கொடுப்பது யார்?
நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இருக்கும் 3 வீரர்களும் குஜராத் அணியின் வீரர்கள் என்பது பிரம்மிப்பை அளிக்கிறது.
- 18:28 (IST) 28 May 2023அகமதாபாத் ஆடுகளம் எப்படி?
இன்றைய இறுதிப் போட்டி நடைபெறும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு உகந்ததாகும். இதனால் இந்த ஆடுகளத்தில் ரன் மழைக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த சீசனில் இங்கு நடந்த 8 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி 5-ல் வெற்றி கண்டுள்ளது. குஜராத் அணி இங்கு ஆடிய 8 ஆட்டங்களில் அந்த அணி 5-ல் வெற்றி கண்டுள்ளது.
- 18:14 (IST) 28 May 2023சென்னை - குஜராத் மோதல்: பரிசுத் தொகை எவ்வளவு?
சென்னை அணி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அதிக முறை (5 தடவை) கோப்பையை வென்ற மும்பையின் சாதனையை சமன் செய்ய வியூகம் அமைக்கும். அதேநேரத்தில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாகி முதல் முயற்சியிலேயே கோப்பையை வென்று அசத்திய குஜராத் அணி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை தனதாக்கி சாதனை படைக்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்த போட்டிக்கான பரிசுத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், கடந்த ஆண்டை போலவே கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.13 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னதாக கண்கவர் கலைநிகழ்ச்சி அரங்கேறுகிறது.
- 18:11 (IST) 28 May 2023நேருக்கு நேர்!
ஐ.பி.எல். தொடரில் குஜராத் - சென்னை அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் குஜராத்தும், 1-ல் சென்னையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் சந்தித்த 2 ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி பெற்றதும் இதில் அடங்கும்.
- 18:10 (IST) 28 May 2023‘குஜராத் கை ஓங்கும், ஆனா கோப்பையில் சி.எஸ்.கே கை தான் இருக்கும்’: கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து!
இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கை ஓங்கும், ஆனால் கோப்பையில் சி.எஸ்.கே அணியின் கை தான் இருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து தெரிவித்தார்.
- 18:09 (IST) 28 May 2023அச்சுறுத்துமா சென்னையின் பந்துவீச்சு?
சென்னை அணிக்கு பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே (21 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (19 விக்கெட்), பதிரானா, தீபக் சாஹர், தீக்ஷனா ஆகியோர் அச்சுறுத்தல் அளிக்ககூடியவர்கள். எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காமல் அணியை நேர்த்தியாக வழிநடத்தக்கூடிய தோனியின் தலைமை சென்னைக்கு பெரும் பலமாக இருக்கும். 41 வயதான தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருப்பதால் அவருக்காக கோப்பையை வெல்ல வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
- 18:00 (IST) 28 May 2023டாப் 3ல் குஜராத் வீரர்கள்!
பந்து வீச்சில் முகமது ஷமி (28 விக்கெட்), ரஷித் கான் (27 விக்கெட்), மொகித் ஷர்மா (24 விக்கெட்) ஆகியோர் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முறையே முதல் 3 இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். நூர் அகமது, ஜோஷ் லிட்டில் ஆகியோரும் வலுசேர்க்கிறார்கள்.
- 17:31 (IST) 28 May 2023புதிய சாதனையை நோக்கி ஹர்திக், கில்: தோனியின் சி.எஸ்.கே-வுக்கு வரலாறு சாதகம் ஏன்?
2011 முதல் நடந்த 12 இறுதிப் போட்டிகளில் 9ல், தகுதிச் சுற்று 1ல் வெற்றிபெற்ற அணியே இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
- 17:30 (IST) 28 May 2023புதிய சாதனையை நோக்கி ஹர்திக், கில்: தோனியின் சி.எஸ்.கே-வுக்கு வரலாறு சாதகம் ஏன்?
2011 முதல் நடந்த 12 இறுதிப் போட்டிகளில் 9ல், தகுதிச் சுற்று 1ல் வெற்றிபெற்ற அணியே இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
- 17:29 (IST) 28 May 2023மிரட்டும் குஜராத் அணியின் பேட்டிங்!
குஜராத் அணி பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சூப்பர் பார்மில் இருக்கிறார். ரன் குவிக்கும் எந்திரம் போல் செயல்படும் அவர் இதுவரை 3 சதம், 5 அரைசதம் உள்பட 851 ரன்கள் குவித்து நடப்பு தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (325 ரன்கள்), விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (317 ரன்கள்), விஜய் சங்கர் (301 ரன்கள்), சாய் சுதர்சன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா போன்றோரும் மிடில் ஆடரில் பலம் சேர்க்கிறார்கள்.
- 17:27 (IST) 28 May 2023சி.எஸ்.கேவு-க்கு ஒருசேர பேட்டிங் தேவை!
சென்னை அணியின் பேட்டிங் வரிசையில், டெவோன் கான்வே (15 போட்டிகளில் 625 ரன்கள், 6 அரைசதம்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (15 போட்டிகளில் 564 ரன்கள், நான்கு அரைசதம்) ஜோடி அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கி வருகின்றனர். இந்த ஐபிஎல்லில் 33 சிக்ஸர்களுடன் சிஎஸ்கே அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த இரண்டாவது வீரர் டுபே (15 போட்டிகளில் 386 ரன்கள், மூன்று அரைசதம்), பட்டியலில் கில் இணைந்தார்.
இவர்களுடன் சென்னை அணியின் மிடில்ஆடரில் களமாடும் ராயுடு, ரஹானே, மொயீன் அலி போன்றோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், சென்னை மேலும் வலுவான ரன்களை குவிக்கும். எனவே, இன்றைய இறுதிப்போட்டியில் சென்னை அணியின் பேட்டிங் வரிசை ஒருசேர சிறப்பாக விளையாட வேண்டும்.
- 16:53 (IST) 28 May 2023‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
It all comes down to this. Are you ready, Superfans?ipl2023 whistlepodu yellove 🦁💛 pic.twitter.com/cyUyHuDSf1
— Chennai Super Kings (@ChennaiIPL) May 28, 2023
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.