Advertisment

'சி.எஸ்.கே-வுக்கு வின்னிங் ரன் அடித்தவர் பா.ஜ.க காரியகர்த்தா': அரசியல் சிக்சர் அடிக்கும் அண்ணாமலை

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, 'சி.எஸ்.கே அணிக்காக வின்னிங் ரன் அடித்த ஜடேஜா பா.ஜ.க-வின் காரியகர்த்தா' என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
May 30, 2023 14:15 IST
GT vs CSK, IPL 2023 Final, Ravindra Jadeja K. Annamalai TN BJP Tamil News

Tamilnadu BJP Annamalai about Ravindra Jadeja GT vs CSK, IPL 2023 Final Tamil News

GT vs CSK, IPL 2023 Final, Ravindra Jadeja K. Annamalai TN BJP Tamil News: 16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

Advertisment

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீசிய சென்னை அணிக்கு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார் ஆல்ரவுண்டர் வீரரான ஜடேஜா. சென்னை அணி தொடக்கம் முதல் விக்கெட் வீழ்த்த போராடிய நிலையில், ஜடேஜா வீசிய 6.6 வது ஓவரில் தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் சுப்மன் கில்லை வெளியேற்றினார். முடிவில் ஜடேஜா 38 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

சென்னை அணி 215 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்த களமிறங்கிய போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் 12:10 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு சென்னைக்கு 171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னையின் வீரரர்கள் அதிரடியாக விளையாடிய போதும், கடைசி கட்டத்தில் வெற்றி இலக்கை எட்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. கடைசி 2 பந்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான தருணத்தில், ஸ்ட்ரைக்கில் இருந்த ஜடேஜா தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை சிதற விட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

publive-image

இந்நிலையில், ஜடேஜா மற்றும் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்போட்டி தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு பேட்டியளித்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, சி.எஸ்.கே அணிக்காக வின்னிங் ரன் அடித்தது பாஜக காரியகர்த்தா" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை பேசுகையில், "சி.எஸ்.கே அணிக்காக வின்னிங் ரன் அடித்தது பாஜக காரியகர்த்தா, ஜடேஜா ஒரு பிஜேபி காரியகர்த்தா. அவரது மனைவி பாஜக எம்.எல்.ஏ, ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர், தமிழனாக பெருமைப் படுகிறேன். அதேநேரத்தில் சி.எஸ்.கே அணியை விட குஜராத் அணியில் தமிழர்கள் அதிகம் பேர் உள்ளனர். 96 ரன் அடித்தது ஒரு தமிழர் அதையும் கொண்டாடுகிறேன்.

publive-image

சிஎஸ்கே அணியில் ஒரு தமிழர் கூட ஆடவில்லை. ஆனாலும் சிஎஸ்கேவை கொண்டாடுகிறோம் ஏன் என்றால் தோனிக்காக, நேற்றைய போட்டியில் கடைசியில் வின்னிங் ரன் அடித்து சென்னை அணியை ஜெயிக்க வைத்தது பாஜக காரியகர்த்தா என்பதில் பெருமை படுகிறோம். அதேதான் 2024 ஆம் ஆண்டு நடைபெறும். இதனை டிஆர்பி ராஜா புரிந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

முன்னதாக தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது டிவிட்டர் பதிவில், "மஞ்சள் படையினரின் இந்த வரலாற்று வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தல தோனி தலைமையில் ஒவ்வொரு சி.எஸ்.கே வீரரும் இந்த மகத்தான வெற்றிக்குப் பங்களித்துள்ளனர்.

உண்மையான தலைவரின் கீழ் இருக்கும் ஒரு அணி, எந்த எதிரியையும் வெல்ல முடியும் என்று விளையாட்டை விரும்புபவர்கள் அனைவரும் நம்பினர். அவர்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டாலும் குஜராத் தோற்கடிக்கப்படும். கடந்த காலங்களில் பல குஜராத்துகளை நாங்கள் தோற்கடித்துள்ளோம். ஒரு அணியாக எப்படி விளையாட வேண்டும் என்பதை உலகிற்குக் காட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையை எப்போதும் நம்புவோம்" என்று அவர் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Tn Bjp #Cricket #Sports #Tamilnadu Bjp #Chennai Super Kings #Csk #Gujarat Titans #Ipl Finals #Ipl News #Ipl Cricket #Bjp #Ipl #Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment