IPL 2023 GT vs CSK, Chennai Weather, Rain Forecast and Pitch Report Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிபட்டியலில் முதல் மற்றும் 2ம் இடத்தில் உள்ளன. லக்னோ 3-ம் இடத்திலும், மும்பை 4 ம் இடத்திலும் உள்ளன. தொடரில் லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குவாலிபையர் சுற்றின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது. குஜராத் - சென்னை அணிகள் மோதும் குவாலிபையர் 1 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி?
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடிய ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. ஆட்டம் முன்னேறும் போது அது மேலும் மந்தமாக இருக்கும். அதனால், இங்கு சுழற்பந்து வீச்சாளர்களின் கை எப்போதும் ஓங்கி இருக்கும். ஸ்லோயர் பந்துகளை வீசும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் விக்கெட்டுகள் கிடைக்கும்.
இந்த மைதானத்தில் ஐபிஎல்லில் முதலில் பேட் செய்த அணியின் சராசரி ஸ்கோர் 163 ஆகும். டி20 போட்டிகளில் முதல் இன்னிங்சில் சராசரியாக 150 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. 2வது இன்னிங்சின் மொத்த ஸ்கோர் 119 ஆகும். இங்கு நடந்த 6 டி20 ஆட்டங்களில், முதலில் பேட்டிங் செய்த அணி 5 ஆட்டங்களில் வென்றுள்ளது. 2வது பேட்டிங் செய்த அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்த சீசனில் லக்னோவவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி 217 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தானுக்கு எதிரான 2வது ஆட்டத்தில் சென்னை அணி 175 ரன்களும், 3வது ஆட்டத்தில் ஐதராபாத் அணி 134 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிரான 4வது ஆட்டத்தில் சென்னை 200 ரன்களும், 5வது ஆட்டத்தில் மும்பையை 139 ரன்னிலும் கட்டுப்படுத்தின. டெல்லிக்கு எதிரான 6வது ஆட்டத்தில் சென்னை 167 ரன்களும், கொல்கத்தாவுக்கு எதிரான 7வது ஆட்டத்தில் சென்னை 144 ரன்களும் எடுத்தது.
மழை பெய்யுமா?
வானிலை அறிக்கைகளின்படி, மே 23 (செவ்வாய்கிழமை) அன்று இந்தியாவின் சென்னை நகரத்தின் வெப்பநிலை பகலில் 36 டிகிரி செல்சியஸாகவும், இரவில் 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். பகல் மற்றும் இரவு நேரங்களில் வானம் வெயிலாகவும் தெளிவாகவும் இருக்கும்.
பகலில் 5% மற்றும் இரவில் 6% மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஈரப்பதம் பகலில் 71% ஆகவும் இரவில் 82% ஆகவும் இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.