IPL 2023: GT vs CSK Probable Playing 11 Tamil News: ஐ.பி.எல் 2023 (இந்தியன் பிரிமீயர் லீக்) டி20 கிரிக்கெட் தொடர் வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச் 31ம் தேதி) தொடங்க உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆட்டத்திற்காக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் களமாடுகிறது. நடப்பு சாம்பியனாக வலம் வரும் குஜராத் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சமபலம் கொண்ட அணியாக உள்ளது. குறிப்பாக, தொடக்க வீரர் ஷுப்மான் கில் டி20-யில் ரெட்ஹட் ஃபார்மில் இருக்கிறார். மிடில்-ஆடரில் டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா வலுசேர்க்கிறார்கள். வேகத்தில் முகமது ஷமியும், சுழலில் ரஷித் கானும் மிரட்ட காத்திருக்கிறார்கள்.
We’re coming home #TitansFam! Thunder, lightning, storm #AavaDe pic.twitter.com/Fgg5OUfPIs
— Gujarat Titans (@gujarat_titans) March 6, 2023
நேருக்கு நேர்
கடந்த சீசனில் அறிமுக அணியாக களமாடிய குஜராத் சென்னையுடன் மோதிய 2 போட்டிகளிலும் வெற்றியை ருசித்தது. முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை
இந்த தோல்விகளுக்கு சென்னை அணி பதிலடி கொடுக்க நினைத்தாலும், போட்டி நடக்குமிடம் குஜராத்தின் சொந்த மைதானம் என்பதால், அந்த அணிக்கே கூடுதல் நன்மை கிடைக்கும். மேலும், தொடரை இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கவே நினைக்கும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
ஐ.பி.எல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்: இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்
சென்னை சூப்பர் கிங்ஸ்:
எம்எஸ் தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அம்பதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே,
குஜராத் டைட்டன்ஸ்:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், விஜய் சங்கர்,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil