Delhi Capitals | Gujarat Titans | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: GT vs DC LIVE Score, IPL 2024
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்
டெல்லி கேபிடல்ஸ்: ப்ரித்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாதியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்
குஜராத் பேட்டிங்
குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஹா 2 ரன்களிலும், கில் 8 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த சாய் சுதர்சன் 12 ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய மில்லர் 2 ரன்களிலும், அபினவ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராகுல் தெவாதியா 10 ரன்களில் அவுட் ஆக, ஷாரூக் கான் டக் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரஷித் கான் சற்று நிலைத்து நின்று ஆடினார். மறுமுனையில் ஆடி மோகித் 2 ரன்களில் அவுட் ஆனார். 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்த ரஷித் கான் 34 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த நூர் அகமது 1 ரன்னில் அவுட் ஆக குஜராத் அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஸ்பென்சர் ஜான்சன் 1 ரன்னில் அவுட் ஆகாமல் இருந்தார்.
குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியில் முகேஷ் 3 விக்கெட்களையும், இஷாந்த் மற்றும் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்களையும், கலீல் மற்றும் அக்சர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
டெல்லி பேட்டிங்
டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி மற்றும் ஜேக் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ஜேக் 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து அபிஷேக் களமிறங்கிய நிலையில் பிரித்வி 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஹோப் களமிறங்கி சிக்சர் அடித்தார். மறுமுனையில் ஆடிய அபிஷேக் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 15 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய பண்ட் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். இதற்கிடையில் மறுமுனையில் ஆடி வந்த ஹோப் 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து சுமித் களமிறங்கி 9 ரன்கள் எடுத்த நிலையில், டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி 8.5 ஓவர்கள் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. பண்ட் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். குஜராத் தரப்பில் சந்தீப் 2 விக்கெட்களையும், ஜான்சன் மற்றும் ரஷீத் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி இதுவரை நடந்த 6 போட்டிகளில் 2ல் வெற்றி, 4ல் தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 6 போட்டிகளில் 3ல் வெற்றி, 3ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
இந்த இரு அணிகளும் வெற்றிக்குப் பிறகு இந்த ஆட்டத்தில் களமாடுகின்றன. ஆதலால் அதே வெற்றி உத்வேகத்தில் ஆடுவார்கள். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், டெல்லி அணி 1-ல் வெற்றியும், குஜராத் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.