Advertisment

GT vs KKR Highlights: மோசமான வானிலை : கொல்கத்தா - குஜராத் போட்டி ரத்து

ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (திங்கள்கிழமை) இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 63-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட இருந்தது.

author-image
WebDesk
New Update
GT vs KKR LIVE Score IPL 2024 Match 63 today Gujarat Titans vs Kolkata Knight Riders scorecard updates in tamil

ஐ.பி.எல். 2024: குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Gujarat Titans | Kolkata Knight Riders: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (திங்கள்கிழமை) இரவு 7:30 மணிக்கு குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 63-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட இருந்தது,

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: GT vs KKR LIVE Score, IPL 2024 

மோசமான வானிலை - டாஸ் போடுவதில் தாமதம் 

இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்த இந்த போட்டிக்கான 7 மணிக்கு டாஸ் போட தயாரான நிலையில், மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு மழை பெருமளவு பெய்ததால், ஆட்டம் நடத்த முடியாத சூழல் ஏறபட்ட நிலையில், இரவு 10.30 மணியளவில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டி ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஒரு புள்ளி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 போட்டிகளில் 9 வெற்றி, 3 தோல்வி ஒரு முடிவில்லை ஆகியவற்றுடன் 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளது..  இதன் மூலம் கொல்கத்ததா அணி குவிலிபையர் 1-ல் விளையாட தகுதி பெற்றுள்ளது.

அதேபோல் 13 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி 7 தோல்வி ஒரு முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. தனது கடைசி போட்டியில் மே 16-ந் தேதி ஐதராபாத் அணியுடன் குஜராத் அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kolkata Knight Riders Gujarat Titans IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment