IPL qualifier 2: Gujarat Titans vs Mumbai Indians Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்கும் அணி நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை (28ம் தேதி) நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கும்.
Advertisment
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி எங்கு நடைபெறும்?
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஐபிஎல் போட்டியில் என்ன நடந்தது?
கடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை குஜராத் டைட்டன்ஸ் எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 188 ரன்கள் குவித்தது. 189 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஐதராபாத் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஐபிஎல்லில் நரேந்திர மோடி மைதானத்தில் சராசரி ஸ்கோர் என்ன?
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 167 ரன்கள்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
ஆடுகளம் எப்படி?
நரேந்திர மோடியின் ஆடுகளம் பேட்டிங் மற்றும் ஸ்ட்ரோக் மேக்கர்களுக்கு உதவும். இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர்களை வீசி குடைச்சல் கொடுக்கலாம். பனிப்பொழிவு முக்கிய காரணியாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்து சேஸ் செய்ய நினைப்பார்கள். மேலும், சொந்த மைதானத்தில் ஆடும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிறிது சாதகமாக இருக்கும்.
மழைப் பொழிவு இருக்குமா?
இன்றைய நிலவரப்படி, அகமதாபாத்தில் வானிலை சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். 43% ஈரப்பதம் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 19 கி.மீ வேகத்தில் இருக்கும். போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil