scorecardresearch

GT vs MI Qualifier 2 Highlights: சுப்மான் கில், மொஹித் சர்மா அபாரம் : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய குஜராத்

அகமதாபாத்தில் இன்று இரவு நடந்த 2-வது தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

GT vs MI Eliminator 2 Live Updates
குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் குவாலிஃபையர் 2 நேரடி போட்டி

Gujarat Titans vs Mumbai Indians Qualifier 2 Match Today: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.

Indian Premier League, 2023Narendra Modi Stadium, Ahmedabad   03 June 2023

Gujarat Titans 233/3 (20.0)

vs

Mumbai Indians   171 (18.2)

Match Ended ( Day – Qualifier 2 ) Gujarat Titans beat Mumbai Indians by 62 runs

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு சுப்மான் கில் விருத்திமான் சஹா ஜோடி சிறப்பாக தொடக்கத்தை கொடுத்த்து. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 6.2 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்த நிலையில்,18 ரன்கள் எடுத்த விருத்தமான் சஹா சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த தமிழக வீர்ர் சாய் சுதர்சன் சுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்த நிலையில், அதிரடியாக விளையாடிய சுப்மான் கில் 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் அரைசத்த்தை நெருங்கிய சுதர்சன், 31 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அரைசதம் கடந்த பின் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து சுப்மான் கில் 49 பந்துகளில் சதமடித்தார். இந்த்தொடரில் அவர் அடிக்கும் 3-வது சதம் இதுவாகும். மேலும் கடைசி 4 இன்னிங்ஸ்களில் 3 சதம் விளாசியுள்ளார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கில் 60 பந்துகளில் 7 பவுண்டரி 10 சிக்சருடன் 129 ரன்கள் குவித்து ஆகாஷ் மத்வால் பந்துவீச்சில் வெளியேறினார்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்த்து. அதிரடியாக ஆடி கடைசி பந்தில் சிக்சருடன் முடித்து வைத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 28 ரன்களும், ரஷித்கான் 2 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில், மத்வால், சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 234 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா வாதாரோ ஜோடி சுமாரான் தொடக்கம் கொடுத்தது. வாதரோ 4 ரன்களிலும், ரோகித் சர்மா 8 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த கேமரூன் கிரீன் சூர்யகுமார் யாதவ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டது.

இதில் அதிரடியாக விளையாடிய கிரீன் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். குறிப்பாக இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரரான முகமது ஷமி ஓவரில் 4 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 24 ரன்கள் குவித்து அசத்தினார்.

தனது அதிரடி ஆட்டத்தின் காரணமாக அரைசதத்தை நெருங்கிய திலக் வர்மா 14 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 11 ஓவர்களில் 124 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்தாலும் சூர்யகுமார் யாதவின் வலுவான பேட்டிங் காரணமாக வெற்றியை நோக்கி பயணித்த மும்பை அணிக்கு 15-வது ஓவரை வீசிய் மொஹித் சர்மா இரட்டை செக் வைத்தார்.

38 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 61 ரன்கள் குவித்த சூயகுமார் யாதவ், மொஹித் சர்மா பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதேஓவரில் விஷ்ணு வினோத் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு டிம் டேவிட், ஜார்டன் ஆகியோர் தலா  2 ரன்களுக்கும், பியூஷ் சாவ்லா 0, கார்த்திகேயா 6 ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்ததால் மும்பை அணி 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மும்பை அணி கடைசி 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. குஜராத் அணி தரப்பில் மொஹித் சர்மா 5 விக்கெட்டுகளும், ஷமி, ரஷித்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், லிட்டில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை குஜராத் அணிகள் மோதுகின்றன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Gt vs mi qualifier 2 live match updates gujarat titans vs mumbai indians ipl 2023 latest score tamil