Gujarat Titans vs Punjab Kings IPL 2024 Live Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 17-வது லீக் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் 200 ரன்களை எடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: GT vs PBKS Live Score, IPL 2024
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது. முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை பந்தாடியது.
மறுபுறம், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தியது. அடுத்த ஆட்டங்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடமும், 21 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 3 ஆட்டங்களில் குஜராத் 2ல் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் 1 முறை வெற்றி பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்
குஜராத் டைட்டன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விரித்திமான் சஹா - கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 2.6 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்திருந்தபோது, 13 பந்துகளில் 11 ரன்கள் அடித்திருந்த விரித்திமான் சஹா, ரபாடா வீசிய பந்தில் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்ய வந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 8.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தபோது, நிதானமாக விளையாடிய கேன் வில்லியம்சன், 22 பந்துகளில் 26 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஹர்பிரீத் பிரர் பந்தில் ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து, சாய் சுதர்சன் பேட்டிங் செய்ய வந்தார். சுப்மன் கில் - சாய் சுதர்சன் ஜோடி அதிரடியாக அடித்து விளையாடினார்கள்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தபோது, சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 33 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஹர்ஷல் படேல் பந்தில் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து விஜய் சங்கர் பேட்டிங் செய்ய வந்தார். இதனிடையே, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் அரைசதம் அடித்து அசத்தினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருந்தபோது, 10 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்திருந்த விஜய் சங்கர், ரபாடா பந்தில், ஹர்பிரீத் பிரர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ராகுல் திவாட்டியா பேட்டிங் செய்ய வந்தார். அதிரடியாக விளையாடியா 8 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார். மறுமுனையில் இருந்த சுப்மன் கில் 48 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்தார்.
இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் - ராகுல் திவாட்டியா இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இறந்தனர்.
இதன் மூலம், 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.