IPL 2024 | Gujarat Titans | Royal Challengers Bangalore: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஞாயிற்றுக்கிழமைநரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
GT vs RCB Macth Live Score: ஆங்கிலத்தில் படிக்க: GT vs RCB Live Score, IPL 2024: Sai Sudharsan powers Gujarat Titans to 200/3 vs Royal Challengers Bengaluru
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு
ஐ.பி.எல் 2024 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே 45-வது லீக் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் ஃபாஃப் டுபிளெஸிஸ் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் விரித்திமான் சஹா பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஸ்வப்னில் சிங் வீசிய முதல் ஓவரில் கடைசி பந்தில், விரித்திமான் சஹா (5), கர்ண் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து சாய் சுதர்ஷன் பேட்டிங் செய்ய வந்தார். சுப்மன் கில் நிதானமாக விளையாட சாய் சுதர்ஷன் அதிரடியாக அடித்து ஆடினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தபோது, சுப்மன் கில் 16 ரன்கள் அடித்திருந்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல் பந்தில், கேமிரான் கிரீன் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷாருக் கான் சாய் சுதர்ஷன் உடன் ஜோடி சேர்ந்தார்.
சாய் சுதர்ஷன் - ஷாருக்கான் இருவருமே அதிரடியாக அடித்து ஆடினார்கள். சிறப்பாக விளையாடிய ஷாருக்கான், 12-வது ஓவரில் 24 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அதிரடி அரைசதம் அடித்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 14.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தபோது, சிறப்பாக விளையாடி 3 ஃபோர்கள், 5 சிக்சர்கள் உள்பட 30 பந்துகளில் 58 ரன்கள் அடித்திருந்த ஷாருக்கான், முஹம்மது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, டேவிட் மில்லர் பேட்டிங் செய்ய வந்தார்.
மறுமுனையில் பேட்டிங்கில் வெளுத்து வாங்கிய சாய் சுதர்ஷன் 34 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அரைசதம் எடுத்தார். டேவிட் மில்லரும் அவர் பங்குக்கு அடித்து ஆடினார்.
இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 201 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இதன்படி, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டுபிளெஸிஸ் பேட்டிங் செய்ய களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக அடித்து ஆடினார்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3.5 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஃபாப் டுபிளெஸிஸ் 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ், விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்தார்.
விராட் கோலி - வில் ஜேக்ஸ் ஜோடி குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிக்சர் ஃபோர் என்று பறக்க விட்டு மைதானத்தையே அனல் பறக்க வைத்தனர். வில் ஜேக்ஸ் ருத்ர தாண்டவம் ஆடினார் என்று சொல்ல வேண்டும். வில் ஜேக்ஸ் 5 ஃபோர், 10 சிக்சர் என 41 பந்துகளில் சரியாக 100 ரன்கள் அடித்தார். விராட் கோலி 44 பந்துகளில் 70 ரன்கள் அடித்தார்.
வில் ஜேக்ஸ் - விராட் கோலியின் இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நடப்பு சீசனில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 4ல் வெற்றி, 5ல் தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதுவரை விளையாடி 9 போட்டிகளில் 2ல் வெற்றி, 7ல் தோல்வி கண்டு கடைசி இடத்தில் தள்ளாடி வருகிறது.
இந்த இரு அணிகளில் குஜராத் அதன் முந்தைய ஆட்டத்தில் டெல்லியிடம் தோல்வியடைந்தது. அதேநேரத்தில், பெங்களூரு பலம் பொருந்திய ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தி எழுச்சி பெற்றது. அந்த வெற்றி உற்சாகத்தில் பெங்களூரு களமாடும். அதேவேளையில், குஜராத் அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 1-ல் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“