10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்றுபுதன்கிழமை இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைப்பெறும் 23-வது லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: GT vs RR LIVE Cricket Score, IPL 2025
டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் - குஜராத் முதலில் பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் அணி முதலில் பேட்டிங் ஆடியது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் - கேப்டன் சுப்மன் கில் ஜோடி களம் புகுந்த நிலையில், கில் 2 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த ஜோஸ் பட்லர் சாய் சுதர்சனுடன் ஜோடி அமைத்தார். தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் பட்லர் 36 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த ஷாருக் கான் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 36 ரன்னில் அவுட் ஆனார். ராகுல் தெவாடியா 24 ரன்னிலும், ரஷித் கான் 12 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனிடையே, தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் அரைசதம் விளாசி 82 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நித்தீஷ் ராணா 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரியான் பராக், கேப்டன் சாம்சனுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு, 48 ரன்கள் சேர்த்தபோது, 14 பந்துகளில் 3 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்திருந்த ரியான் பராக் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த துருவ் ஜோரேல் 5 ரன்களில் வீழ்த்தார். இதன் பிறகு களமிறங்கிய ஹெட்மயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில், அரைசதத்தை நெருங்கிய கேப்டன், சம்சன், 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், அதிரடியாக விளையாடிய ஹெட்மயர், அரைசதம் கடந்த நிலையில், 3 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 19.2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜாராத் அணி, 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. குஜராத் அணி தரப்பில், பிரசித் கிருஷ்ணா 3, சாய் கிஷோர், ரஷித் 2, கெஜ்ரிலியோ, அர்ஷத் கான், சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இரு அணிகள் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, ஃபசல்ஹக் ஃபரூக்கி, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
நடப்பு தொடரில் இதுவரை நடந்த 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி, ஒரு போட்டியில் மட்டும் தோல்வி பெற்றுள்ள குஜராத் 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் 4 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.
லீக் சுற்றில் இந்த இரு அணிகள் ஆடிய கடைசி போட்டிகளில் வென்று இருப்பதால், அதே உத்வேகத்தில் இரு அணிகளும் களமாடும். தொடக்கப் போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள குஜராத் சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்த முயலும். அதற்கு ராஜஸ்தான் முட்டுக்கட்டை போட முடியுமா? என்பது இன்று தெரிந்து விடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் 6 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 6 போட்டிகளில் குஜராத் 5 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.