Advertisment

GT vs SRH IPL Highlights : ஐதராபாத் அணியை வீழ்த்தியது குஜராத் : முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்

IPL 2023 Score,Gujarat Titans vs Sunrisers Hyderabad Score : அகமதாபாத்தில் நடைபெற்ற சைன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
GT vs SRH IPL Live Score | IPL 2023 Live Score | Gujarat vs Hyderabad Live Score

ஐபிஎல் 2023, குஜராத் டைட்டன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஸ்கோர்

IPL 2023,Gujarat Titans vs Sunrisers Hyderabad Score Updates : 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 62-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதியது.

Advertisment

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரர் விருத்திமான் சஹா ரன் கணக்கை தொடங்காமலே விக்கெட்டை பறிகொடுத்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் தொடக்க வீரர் சுப்மான் கில்லுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அதிரடியாக விளையாடிய சுப்மான் கில் அரைசதம் அடித்து அசத்திய நிலையில், மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன், ஹர்திக் பாண்டியா 8, மில்லர் 7, திவாட்டிய 3, என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஆனாலும் அதிரடியாக விளையாடிய சுப்மான் கில் சதமடித்து அசத்திய நிலையில், 58 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 156 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்திருந்த குஜராத் அணி 188 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் 4 வீரர்கள் டக் அவுட் ஆகினர்.

ஐதராபாத் அணி தரப்பில், புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜென்சன் ஃபுளேரிக், நடராஜன் ஆகியோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 189 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில்,  அன்மோல் ப்ரீத் 5, அபிஷேக் சர்மா 4 மார்க்ரம் 10, திரிபாதி 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன்பிறகு 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹென்ரி க்ளாசன் ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.

ஆனால் மறுமுனையில், சன்வீர்சிங் 7, அப்துல் சமத் 4, ஜென்சன் 3 என அடுத்துடுத்து விக்கெட் வீழ்ந்தது. இதனால் 59 ரன்களுக்கு ஐதராபாத் அணி 7 விக்கெட்டகளை இழந்த நிலையில், அடுத்த சில ஓவர்களில் போட்டி முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் 8-வது விக்கெட்டுக்கு க்ளாசனுடன் ஜோடி சேர்ந்த புவனேஷ்வர் குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் ஐதராபாத் வெற்றியை நோக்கி முன்னேறிய நிலையில் அரைசதம் கடந்த க்ளாசன், 44 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 8-வது விக்கெட்டுக்கு புவி – க்ளாசன் ஜோடி 68 ரன்கள் சேர்த்தது.  

சிறப்பாக விளையாடிய புவனேஷ்வர் குமார் 27 ரன்களில் ஆட்டமிழந்தார் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிரடியாக விளையாடிய மார்கண்டே 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

குஜராத் அணி தரப்பில் முகமது ஷமி, மொஹித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி நடப்பு ஆண்டில் முதல் அணியாக ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ipl Live Score
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment