GT vs SRH IPL 2024, Gujarat Titans vs Sunrisers Hyderabad Highlights: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3:30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 12வது லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் - பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். அகர்வால் 16 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து ஹெட் , அபிஷேக் ஷர்மா இருவரும் அதிரடி காட்டினர் . அணியின் ஸ்கோர் 58ரன்னாக இருந்த போது ஹெட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து அபிஷேக் ஷர்மா 29 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த மார்க்ரம் , கிளாசன் இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர்.
ஆனாலும் கிளாசன் 24 ரன்களும் , மார்க்ரம் 17 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்துல் சமத் அதிரடி காட்டி 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் அணி 162 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசி மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, 163 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக சாஹா - கில் ஜோடி களமிறங்கினர். தொடக்கத்தில் சாஹா 25 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர், கில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் சாய் சுதர்சன் , டேவிட் மில்லர் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவரில் 168 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 36 பந்துகளில் 45 ரன்களும் , மில்லர் 27 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“