பெங்கால் அணியை வீழ்த்திய குஜராத்; தமிழ் தலைவாஸ் போராடி தோல்வி

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஷஹீத் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஷஹீத் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கத்தில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

author-image
WebDesk
New Update
Gujarat Giants vs Bengal Warriors and Tamil Thalaivas vs Bengaluru Bulls PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023: குஜராத் ஜெயண்ட்ஸ் vs பெங்கால் வாரியர்ஸ்; தமிழ் தலைவாஸ் vs பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இந்த தொடரில், உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஷஹீத் விஜய் சிங் பதிக் விளையாட்டு அரங்கத்தில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ்  அணிகள் மோதுகின்றன.

குஜராத் வெற்றி

இன்றைய முதல் ஆட்டத்தில் குஜராத் – பெங்கால் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே குஜராத் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக பர்தீக் தாஹியா ரெய்டுகள் மூலம் பாயிண்ட்களை குவித்தார். பெங்கால் அணி கடும் போட்டி அளித்தாலும் பர்தீக் தாஹியாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

Advertisment
Advertisements

இதனால் குஜராத் அணி 9 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி 51 புள்ளிகளையும், பெங்கால் அணி 42 புள்ளிகளையும் பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக பர்தீக் தாஹியா 25 புள்ளிகளை எடுத்து அசத்தினார். இதில் 22 பாயிண்டகளை ரெய்டுகள் மூலம் எடுத்தார். பெங்கால் அணியில் அதிகபட்சமாக நிதின் குமார் 12 புள்ளிகளையும், மனீந்தர் 11 புள்ளிகளையும் எடுத்தனர்.

தமிழ் தலைவாஸ் போராடி தோல்வி

இன்றைய இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இரு அணிகளும் மாறி மாறி முன்னிலைப் பெற்று, கடுமையாக போராடின. தமிழ் தலைவாஸ் முன்னிலையை தக்கவைத்து வந்தாலும், கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது.

பெங்களூரு புல்ஸ் 38 புள்ளிகளையும், தமிழ் தலைவாஸ் அணி 37 புள்ளிகளையும் பெற்றது. இதனால் ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் பரிதாப தோல்வி அடைந்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பரத் 9 புள்ளிகளை எடுத்தார். தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக நரேந்தர் 10 புள்ளிகளையும் நிதின் 7 புள்ளிகளையும் எடுத்தனர்.

தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதல் 

நடப்பு சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2ல் வெற்றி, 6ல் தோல்வி என 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும். ஏற்கனவே தொடர் தோல்விகளால் துவண்டுள்ள அந்த அணிக்கு இன்றைய போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இதேபோல், 20 புள்ளிகளுடன் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கும் பெங்களூரு புல்ஸ் அணிக்கும் இது முக்கிய போட்டியாகும். அந்த அணியும் வெற்றிக்கு கடுமையாக போராடும். எனவே இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Thalaivas Pro Kabaddi League

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: