Advertisment

மீண்டும் வீழந்தது குஜராத் : தபாங் டெல்லி அபார வெற்றி

புரோ கபடி தொடரில் இன்று இரவு 8 மணிக்கு உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது

author-image
WebDesk
New Update
 Gujarat Giants vs Dabang Delhi KC Pro Kabaddi League season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023: தபாங் டெல்லி - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League season 2023: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Advertisment

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு ஒரு ஆட்டம் நடைபெற உள்ளது. அதில் இரவு 8 மணிக்கு நொய்டாவில் நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 38-25 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அஷூ மாலிக் 11 புள்ளிகளும். மன்ஜீத் 9 புள்ளிகளும் எடுத்தனர்.  

இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி, 5 வெற்றிகளுடன் 30 புள்ளிகள் பெற்று பட்டியலில், 3-வது இடத்தில் உள்ளது. தோல்வியடைந்த குஜராத் அணி 6 வெற்றிகளுடன் 34 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. 

குஜராத் ஜெயண்ட்ஸ் vs தபாங் டெல்லி கே.சி 

நடப்பு சீசனில் இதுவரை நடந்த 9 போட்டிகளில் 6 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் புள்ளிகள் பட்டியலில் 33 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், 8 போட்டிகளில் 4ல் வெற்றி, 3ல் தோல்வி, ஒரு ஆட்டம் டை என 25 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் தபாங் டெல்லி கே.சி. அணி உள்ளது. 

டிசம்பர் 31 அன்று பெங்கால் வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 51-42 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். அதேநேரத்தில் டிசம்பர் 30 அன்று நடந்த போட்டியில் தபாங் டெல்லி கே.சி. அணி உ.பி யோதாஸ் அணியை 35-25 வீழ்த்தியது. அதிரடியான வெற்றிக்குப் பிறகு இந்த இரு அணிகள் களமிறங்குவதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

நேருக்கு நேர் 

பி.கே.எல் வரலாற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தபாங் டெல்லி கே.சி. ஆகிய இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இரு அணிகளும் சம அளவில் சவால் விட்டு, 5ல் வெற்றியும், 5ல் தோல்வியும் கண்டுள்ளது. 2 போட்டிகள் டையில் முடிந்தது.

குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தபாங் டெல்லி கே.சி. அணிகள் மோதிய முந்தைய சீசன் போட்டி தபாங் டெல்லிக்கு சாதகமாக முடிந்தது. அந்த அணி 50-47 என்கிற புள்ளிகள் கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment