Advertisment

புரோ கபடி: குஜராத்தை வீழ்த்தியது ஜெய்ப்பூர்; அரியானாவை வீழ்த்தி புனேரி பால்டன் அபார வெற்றி

புரோ கபடி தொடரில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
Gujarat Giants vs Jaipur Pink Panthers and Haryana Steelers vs Puneri Paltan PKL Season 10 match updates in tamil

புரோ கபடி லீக் 2023 - 24: குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி; அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.

Advertisment

இந்நிலையில், இந்த தொடரில் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள தேவிலால் உள்விளையாட்டு அரங்கத்தில் திங்கள்கிழமை (19.02.2024) புரோ கபடி 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி புள்ளிகள் பெறுவதில் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்ட நேர முடிவில், ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 45 புள்ளிகளையும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 35 புள்ளிகளையும் பெற்றிருந்தன. இதன் மூலம், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

புனேரி பால்டன் அபார வெற்றி

இதைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதியது. 

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய புனேரி பால்டன் அணி புள்ளிகள் பெறுவதில் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்ட நேர முடிவில், அரியானா ஸ்டீலர்ஸ் அணி 36 புள்ளிகளையும் புனேரி பால்டன் அணி 51 புள்ளிகளையும் பெற்றிருந்தன. இதன் மூலம், அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி அபார வெற்றி பெற்றது.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pro Kabaddi League
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment