Pro Kabaddi Day 2 Updates - Gujarat Giants vs Tamil Thalaivas Tamil News: 12 அணிகள் களமாடும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடத்தப்பட உள்ளன. இந்தத் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றாக அணியாக பாட்னா பைரேட்ஸ் அணி (3 முறை) உள்ளது.
இந்த சீசனுக்கான முதல் போட்டியில் டபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோதிய நிலையில், அந்த போட்டியில் 41-27 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
Here's the standings after the opening day of #FantasticPanga as the defending champions lead the table 📋#vivoProKabaddi pic.twitter.com/6c6L7vB6JI
— ProKabaddi (@ProKabaddi) October 7, 2022
இந்நிலையில், தமிழக கபடி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி மோதும் ஆட்டம் இன்று அரங்கேறுகிறது. இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு கண்டிவாரா உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ் தலைவாஸ் அணி எப்படி?
தமிழ் தலைவாஸின் மிகப்பெரிய பலம் இந்த முறை கேப்டன் பவன் செராவத் தான். ஒன்பதாவது சீசனின் ஏலத்தில், தலைவாஸ் பவன் செஹ்ராவத்தை லீக் வரலாற்றில் அதிக விலை கொண்ட வீரராக ரூ.2.26 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரது வருகை ரெய்டிங் பிரிவில் மற்ற அணிகளுக்கு கடும் சவாலை கொடுக்கும்.
மேலும், கடந்த மூன்று புரோ கபடி லீக் சீசன்களில் செஹ்ராவத் நம்பர் ஒன் ரைடராக திகழ்ந்து வருகிறார். அவர் கடந்த சீசனில் பெங்களூரு புல்ஸை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்றார். மேலும் அவரது கேப்டன்சியின் கீழ், இந்திய ரயில்வே அணி மூன்று மூத்த தேசிய சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளது.
Cool. Composed. And Pawan-like!
From yesterday’s press meet.#IdhuNammaTeam#GiveItAllMachi#TamilThalaivas#VivoProKabaddi pic.twitter.com/qQ0powdvna— Tamil Thalaivas (@tamilthalaivas) October 7, 2022
புரோ கபடியில் அவரது சிறப்பான சாதனையைப் பார்க்கும்போது, இந்த சீசனில் தமிழ் தலைவாஸின் முதுகெலும்பாக அவர் திகழ்வார் என்று நம்பலாம். ரெய்டிங் பிரிவில் இளம் ரெய்டர்களான அஜிங்க்யா பவார் மற்றும் ஹிமான்ஷு ஆகியோரின் திறன் அவருக்கு கைகொடுக்கும்.
அஜிங்க்யா பவார் கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக 18 போட்டிகளில் 108 ரெய்டு புள்ளிகளை அடித்தார். அதேசமயம் ஹிமான்ஷு 10 ஆட்டங்களில் ஒரு சூப்பர் ரெய்டு உட்பட 38 ரெய்டு புள்ளிகளை குவித்தார். சாகர் ரதீ மற்றும் விஸ்வநாத் வி இந்த சீசனில் அணியின் இரு கார்னர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பார்கள்.
ரைட் கார்னர் டிஃபென்டர் ரதி முந்தைய சீசனில் அதிக டிஃபென்டிங் புள்ளிகளைப் பெற்று, சிறந்த டிஃபென்டர் விருதைப் பெற்றார். இதேபோல், 69-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்திற்காக ஆல்ரவுண்ட் ஷோ மூலம் லெஃப்ட் கார்னர் டிஃபென்டர் விஸ்வநாத் வி ரசிகர்களை கவர்ந்தார்.
லெஃப்ட் கவர் டிஃபென்டர் மோஹித் கடந்த சீசனியில் தமிழ் தலைவாஸ் அணிக்காக 20 போட்டிகளில் 24 டிஃபென்டிங் புள்ளிகளைப் பெற்றார். எனவே, இந்த சீசனிலும் அவர் அதே பொசிஷனில் ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த சீசனில் களமாடிய அபிஷேக் ஏழு ஆட்டங்களில் மட்டுமே விளையாடி, 12 டிஃபென்டிங் புள்ளிகளைப் பெற்றார். மோஹித் மற்றும் அபிஷேக்கின் மேம்பட்ட செயல்திறன் இந்த ஆண்டு அணி புள்ளிகள் பட்டியலில் முதல் 6 இடங்களுக்குள் முன்னேற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தலைவாஸ் களத்தில் ஆடும் செவன்:-
சாகர் ரதி (ரைட் கார்னர்), விஸ்வநாத் வி (லெஃப்ட் கார்னர்), அஜிங்க்யா பவார் (ரைட் இன்), ஹிமான்ஷு (லெஃப்ட் இன்), எம் அபிஷேக் (ரைட் கவர்), மோஹித் (லெஃப்ட் கவர்) மற்றும் பவன் குமார் செஹ்ராவத் ( சென்டர்).
ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
புரோ கபடி லீக் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் -ல் லைவ் ஸ்ட்ரீமிங்கில் இருந்து அனைத்து லைவ் ஆக்ஷன்களையும் பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.