செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கல பதக்கம் வெல்வது எளிதானது கிடையாது என்று இந்திய பி அணியின் வீரர் டி.குகேஷ் கூறியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்டில் அணிகள் பிரிவு பதக்கங்கள் தவிர தனிநபர் பிரிவில் 2 தங்கம், இரு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 7 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.
ஓபன் பிரிவில் இந்திய பி அணியின் டி. குகேஷ் முதல் போர்டில் 11 சுற்றுகள் விளையாடி 9 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதேபோன்று 2 வது போர்டில் விளையாடிய நிஹால் சரின் 10 சுற்றுகளில் 7.5 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஓபன் பிரிவில் இந்திய அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர். வீரர் கு கேஷ் கூறுகையில் “ செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. 10 வது சுற்றில் அப்துசட்டோ ரோவை நன்றாக எதிர்த்து விளையாடினேன். பின்பு முட்டாள் தனமாக சில நகர்வுகளை செய்ததால், இதுவே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஒருவேளை நான் வெற்றிபெற்றிருந்தால் அல்லது போட்டி டிராவில் முடிந்திருந்தால் தங்கத்திற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. . ஒலிம்பியாட்டில் வெண்கலப் பதக்கம் வெல்வது என்பது எளிதானது கிடையாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.