Advertisment

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று சாதனை: தமிழ்நாட்டு வீரர் குகேஷ்-க்கு குவியும் பாராட்டுகள்

Gukesh wins Candidates: செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று 17 வயது இளம் வீரர் குகேஷ் சாதனை படைத்துள்ளார். செஸ் உலகம் அவரை கொண்டாடி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
GUKESH-CANDIDATES-CROP.webp
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gukesh wins Candidates: கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை  தமிழ்நாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். 

Advertisment

சென்னையைச் சேர்ந்த 17 வயதான டி.குகேஷ் டொராண்டோவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 3 வீரர் ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டார். இந்த போட்டி டிராவில் முடிந்த பிறகு, அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் குகேஷ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 

இதையடுத்து அடுத்த லெவல் போட்டிக்கு குகேஷ் தகுதி பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள போட்டியில் நடப்பு உலக சாம்பியனான டிங் லிரனை எதிர்கொள்ளும் வாய்பை பெற்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த இளைஞருக்கு இது ஒரு அற்புதமான சாதனையாகும். அவர் ஏற்கனவே பல்வேறு சாதனைகளை படைத்த நிலையில் இது அவரது செஸ் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மைல்கல் ஆகும். 

குகேஷ் தனது 12 வயது, 7 மாதங்கள், 17 நாட்களில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆனார், உலகின் இளம்  கிராண்ட்மாஸ்டர் என்ற டேக்கை வெறும் 17 நாட்களில் தவறவிட்டார். குகேஷின் இந்த சாதனைக்கு முன்னாள் உலக சாம்பியன்கள் முதல் செஸ்  ஜாம்பவான்கள் வரை பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். செஸ் உலகம் அவரை கொண்டாடி வருகிறது. 

5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், குகேஷின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X பக்கத்தில்,  "இளம் சாம்பியன் குகேஷ்க்கு வாழ்த்துகள். போட்டியின் போது கடினமான சூழலை நீங்கள் கையாண்ட விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த தருணத்தை கொண்டாடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

மற்றொரு முன்னாள் உலக சாம்பியனான விளாடிமிர் கிராம்னிக் கூறுகையில், "என்ன ஒரு மாலைபொழுது. 

குகேஷுக்கு வாழ்த்துக்கள். ஃபேபி, இயன் இருவரின் அபாரமான விளையாட்டுக்கு சிறப்பு விருதுகள். நான் இதுவரை பார்த்ததில் மிகவும் சுவாரஸ்யமான போட்டிகளில் ஒன்று" என்று பதிவிட்டுள்ளார். 

இந்த ஆண்டு கேண்டிடேட்ஸில் போட்டியிட்ட2 வீரர்களுக்கு பயிற்சியளித்த கிராண்ட்மாஸ்டர் ஆர்.பி. ரமேஷ், குகேஷின் செயல்திறன் ஊக்கமளிப்பதாகக் கூறினார்.

தானியா சச்தேவ் தனது X பக்கத்தில், "எதிர்காலம் இங்கே உள்ளது. அது இன்று. 22.04.2024 நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தேதி இது. உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் டிங் லிரன் vs குகேஷ், என்று இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/sports/chess/gukesh-wins-candidates-future-is-here-chess-reactions-9283597/?tbref=hp

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

     

    Chess Gukesh
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment