Advertisment

'அவமானப்படுத்தப்பட்டேன்'... ஆந்திர கிரிக்கெட்டில் இருந்து விலகியது ஏன்? - ஹனுமா விகாரி விளக்கம்

சக வீரர் ஒருவரை திட்டியதாகவும், அவர் அரசியல்வாதியின் மகனாக இருக்கவே, ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கத்தில் புகாரளித்து தன்னை வேண்டுமென்றே கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாகவும் ஹனுமா விகாரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Hanuma Vihari reveals why he left Andhra cricket association Tamil News

ஆந்திரா ரஞ்சி அணியில் இருந்து உடனடியாக விலகும் முடிவையும் தான் எடுத்ததற்கான காரணம் குறித்து ஹனுமா விஹாரி விளக்கமளித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Hanuma Vihari | Ranji Trophy: இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2018ம் அறிமுகமானவர் ஹனுமா விஹாரி. இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 839 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான ஹனுமா விஹாரி, இனி அம்மாநில கிரிக்கெட் சங்க அணிக்காக விளையாட போவதில்லை என்று உறுதி தெரிவித்துள்ளார். 

Advertisment

ஹனுமா விஹாரி ஆந்திர மாநில ரஞ்சி அணியில் 7 ஆண்டுகளுக்கு மேல் விளையாடியுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான அணியை தொடக்க போட்டிகளில் அவரே கேப்டனாக வழிநடத்தினார். ஆனால், மேற்கு வங்க அணிக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்திற்குப் பிறகு, கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனால், ஆந்திர மாநில ரஞ்சி அணியின் கேப்டனாக  ரிக்கி புய் நியமிக்கப்பட்டார். ஹனுமா விஹாரி டாப்-ஆர்டர் பேட்டராகத் தொடர்ந்தார்.

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை இந்தூரில் நடந்த மத்தியப் பிரதேசம் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி காலிறுதிப் போட்டியில் ஆந்திர அணி தோல்வியடைந்ததை அடுத்து, ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கத்தை கடுமையாக சாடியுள்ளார் ஹனுமா விஹாரி. மேலும், அணியின் சக வீரர் ஒருவரை திட்டியதாகவும், அவர் அரசியல்வாதியின் மகனாக இருக்கவே, ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கத்தில் புகாரளித்து தன்னை வேண்டுமென்றே கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் தான்,  ஆந்திரா ரஞ்சி அணியில் இருந்து உடனடியாக விலகும் முடிவையும் தான் எடுத்ததாகவும் ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக  ஹனுமா விஹாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பெங்கால் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நான் தான் கேப்டனாக இருந்தேன், அந்த ஆட்டத்தின் போது நான் 17 வது ஓவரில் சக வீரரிடம் கோபத்துடன் கத்தினேன். அவர் தனது அப்பாவிடம் (அரசியல்வாதி) புகார் செய்தார். பதிலுக்கு அவரது அப்பா எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்திடம் கேட்டார். இருப்பினும், கடந்த ஆண்டு இறுதிப் போட்டியாளர்களான பெங்கால் அணிக்கு எதிராக நாங்கள் 410 ரன்களைத் துரத்தினோம், என்னுடைய எந்தத் தவறும் இல்லாமல் கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். 

நான் அந்த வீரரிடம் தனிப்பட்ட முறையில் எதுவும் தவறாக சொல்லவில்லை. ஆனால் கடந்த ஆண்டு தனது அணிக்காக உயிரைக் கொடுத்து, காயம் அடைந்த போதும் இடது கையில் பேட் செய்த பையனை விட, அந்த வீரர்தான் முக்கியம் என்று சங்கம் நினைத்தது. ஆந்திர அணியை கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை நாக் அவுட் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளேன். 16 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளேன். இதனை நான் அவமானகரமானதாக உணர்ந்தேன். ஆனால் நான் இந்த சீசனில் தொடர்ந்து விளையாடுவதற்கு ஒரே காரணம் நான் விளையாட்டையும் எனது அணியையும் மதிப்பதால்தான்.

இதில் சோகமான விடயம் என்னவென்றால், வீரர்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்று எங்களது கிரிக்கெட் சங்கம் நினைக்கிறது. அவர்களால் தான் வீரர்கள் இருக்கிறார்கள் என்கிற நினைப்பு அவர்களிடம் உள்ளது. எனது சுயமரியாதையை இழந்த இடத்தில், ஆந்திர அணிக்காக இனி ஒருபோதும் விளையாட மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். நான் எனது அணியை விரும்பினேன். ஒவ்வொரு சீசனிலும்  நாங்கள் வளர்ந்து வந்த விதத்தை நான் விரும்புகிறேன். ஆனால் சங்கம் நாங்கள் வளர விரும்பவில்லை." என்று அவர் அதில் கூறியுள்ளார். 

30 வயதான ஹனுமா விஹாரி கடந்த சீசனிலும் ஆந்திராவை காலிறுதிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அதே இடத்தில் அவர்கள் மத்திய பிரதேசத்திடம் வீழ்ந்தனர். போட்டியில் பேட்டிங் செய்யும் போது ஏற்பட்ட முன்கை முறிவு காரணமாக, வலது கை வீரரான ஹனுமா விஹாரி பின்னர் இடது கையில் பேட் செய்தார். ஆனாலும், அவரது தலைமையிலான அணி தோல்வியுற்றது. 

அவர் கடைசியாக 2022 இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தான் இந்தியாவுக்காக விளையாடினார். 2023-24 சீசனுக்கு முன்னதாக மத்தியப் பிரதேச அணிக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும், அவருக்கு ஆந்திர கிரிக்கெட் சங்கம் என்.ஓ.சி (ஆப்ஜெக்ஷன் சான்றிதழ் - No Objection Certificate) வழங்க மறுப்பு தெரிவித்தார். அதனால், இந்த சீசனில் அணியின் கேப்டனாக இருக்க முடிவு செய்தார்.

பதிலளித்த சக வீரர் 

இந்நிலையில், ஹனுமா விஹாரி தன்னைப் பற்றி புகார் கூறிய அரசியல்வாதி மகன் பெயரை விஹாரி வெளியிடாத நிலையில், தற்போது அது குறித்து அந்த வீரரே பதிலடி கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுவரை முதல் தர போட்டியில் கூட அறிமுகமாக விக்கெட் கீப்பர் பேட்டரான கே.என் ப்ருத்விராஜ் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், “அந்த கமெண்ட் பாக்ஸில் நீங்கள் தேடும் பையன் நான்தான். நீங்கள் கேட்டது முற்றிலும் தவறானது, விளையாட்டை விட யாரும் உயர்ந்தவர்கள் அல்ல. ஆனால், எனது சுயமரியாதை அதையும் விட பெரியது. எந்தவொரு தளத்திலும் தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் மோசமான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்று என்ன நடந்தது என்பது அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்த அனுதாப விளையாட்டை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விளையாடுங்கள்,” என்று கூறியுள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: And he complained to his dad (a politician)’: Hanuma Vihari reveals why he left captaincy in the middle of Ranji Trophy campaign

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ranji Trophy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment